முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு

சனிக்கிழமை, 4 மே 2024      உலகம்
America 2024-05-04

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவில் பென்சில்வேனியா பகுதியில் 41 வயதான ஹீதர் பிரஸ்வ் என்பவர் நர்ஸ் ஆக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 5 சுகாதார மையத்தில் பணியாற்றிய, இவர் 17 நோயாளிகளை கொலை செய்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது. 

29 நோயாளிகளுக்கு அதிக அளவிலான இன்சுலின் மருந்தை அளித்துள்ளார். இதனால் 17 நோயாளிகள் இறந்துள்ளனர்.  இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஹீதர் பிரஸ்வ் 3 கொலை வழக்குகளில் குற்றவாளி என நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டார். 

இதையடுத்து, நோயாளிகளுக்கு வேண்டுமென்றே, தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து