முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று ஓய்கிறது : தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு

சனிக்கிழமை, 4 மே 2024      இந்தியா
Modi-Rahul 2024-05-04

Source: provided

பெங்களூரு : கர்நாடகத்தில் 2-வது கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது. இதையொட்டி கட்சி தலைவர்கள்  இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

 கர்நாடகத்தில் பாராளுமன்ற தேர்தல் 2 கட்டமாக கடந்த 26-ம் தேதி மற்றும் மே 7-ம் தேதியில்  நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் 69.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இந்த நிலையில் 2-வது கட்ட தேர்தல் பெலகாவி, சிக்கோடி, விஜயாப்புரா, பாகல்கோட்டை, பீதர், ஹாவேரி, சிவமொக்கா, தாவணகெரே, பல்லாரி, தார்வார், கொப்பல், உத்தர கன்னடா, கலபுரகி, ராய்ச்சூர் ஆகிய 14 தொகுதிகளில் நடக்கிறது. 

இதில் 227 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இதையொட்டி அங்குள்ள தொகுதிகளில் சுட்டெரிக்கும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். 

கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்தும், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பா.ஜ.க. மாநில தலைவர் விஜயேந்திரா உள்ளிட்ட தலைவர்கள் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்தும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். 

அவர்கள் கொளுத்தும் வெயிலில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்களும் தங்களுக்கு தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார்கள். 

இந்த நிலையில் இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளின் தேசிய தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தை கர்நாடகாவில் முடித்துக் கொண்டனர். தற்போது கர்நாடக தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து