முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது

சனிக்கிழமை, 4 மே 2024      இந்தியா
Vote 2024-01-05

Source: provided

புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி இந்த 94 தொகுதிகளிலும் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. 

பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி கடந்த மாதம் 19-ம் தேதி 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. கடந்த 26-ம் தேதி 89 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. 

இதையடுத்து 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 94 தொகுதிகளிலும் கடந்த 12-ம் தேதி மனு தாக்கல் தொடங்கியது. 19-ம் தேதி மனுதாக்கல் நிறைவு பெற்றது.

இதையடுத்து கடந்த மாதம் 22-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு 94 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியது. 

3-ம் கட்ட தேர்தல் நடக்கும் 94 தொகுதிகளும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடங்கி உள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் 26 தொகுதிகள், கோவாவில் 2 தொகுதிகளுக்கு ஒரே கட்ட மாக வாக்குப்பதிவு நடப்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் 14 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், மகராஷ்டிரத்தில் 11 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 10 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 4 தொகுதிகள், தத்ரா நகர்ஹவேலி யூனியன் பிரதேசத்தில் 2 தொகுதிகள், காஷ்மீரில் ஒரு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட இருக்கிறது.

3-ம் கட்ட தேர்தலுக்கான 94 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) 94 தொகுதிகளிலும் மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. 

நாளை தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 7-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்ய தொடங்கி உள்ளனர். 

நாளை 94 தொகுதிகளிலும் வாக்குச்சாவடிகளுக்கு அனைத்து பொருட்களும் கொண்டு சென்று தயார் நிலையில் வைக்கப்படும். 7-ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த நிலையில் 94 தொகுதிகளிலும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து