முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மாரடைப்பை தடுக்க உதவும் 7 இயற்கை உணவுகள்

  • இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளத்தின் அடைப்பின் விளைவால்  மாரடைப்பு  ஏற்படுகிறது
  • மாரடைப்பு, இதய தசைகளுக்கு இரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜன் பாய்வதை நிறுத்தும்போதும் ஏற்படுகிறது.
  • மீன் எண்ணெய் மாத்திரை,பூண்டு,பனங்கல்கண்டு,பால், திராட்சை,பூசணிக்காய்,இஞ்சி எலுமிச்சை தேன்,செம்பருத்தி,ஆளி விதை. இவற்றை எப்படி நமது உணவு முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதை காணலாம்.

 

1.மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும். கொழுப்பில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என்ற இரண்டு வகைகள் உள்ளன. அவற்றில் நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை நாம் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது அவசியம். ஒமேகா -3 ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் ஒன்றாகும். 

2.பூண்டு ஊளைச் சதையைக் கரைக்கும்,வெள்ளைப் பூண்டை உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிடுவதால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம். பூண்டு நச்சுகளை வெளியேற்றவும் உதவும், செரிமான அமைப்பை சுத்தமாக வைத்திருக்க வெள்ளைப் பூண்டை உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிடுவதால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம் .100 மில்லி பாலில்  5 பூண்டைபோட்டு கொதிக்க வைத்து உடன் 50 கிராம் பனங்கல்கண்டை போட்டு கலந்து பருகி வந்தால் மாரடைப்பு நீங்கும்.

3.திராட்சை பழச்சாறுக்கு, ரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது.இதயக் குழாய்களில் உள்ள ரத்தம் உறைதலே மாரடைப்புக்கு காரணம்,ரத்தம் உறையாமல் இருக்க திராட்சை உதவுகிறது,திராட்சையில் விட்டமின்கள் பி-1, பி-2, பி-6, பி-12 பொஸ்பரஸ், இரும்புச்சத்து பல வகையான ஊட்டச்சத்துக்களை  கொண்டுள்ளது.திராட்சை பழம் சாப்பிட்டால் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்,மற்றும் இதய நோய் தீரும்.

4.வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும்,அடிக்கடி உணவில் பூசணியை சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காயை  சாப்பிடுபவர்களுக்கு கண்  பார்வை சிறப்பாக இருக்கும்.

5.மாரடைப்பை தடுக்க இஞ்சிச் சாறு,எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பருகி வரலாம்.

6.செம்பருத்தி இதய நோய்களைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது,செம்பருத்தி பூவை காய வைத்து பொடிசெய்து கஷாயம் செய்து சாப்பிட்டால் மாரடைப்பை தடுக்க உதவும்.

7.ஆளி விதை விதையில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு சக்திவாய்ந்த உணவாகும். இதனால், இதய நோய், அபாயத்தைக் குறைக்கலாம்.ஆளி விதை கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது,  இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மனச்சோர்வை எதிர்த்துப் போராடுகிறது  இதய நோயை  குறைக்கிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்