முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.டி.ராமாராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க நடிகர் சிரஞ்சீவி கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 28 மே 2024      சினிமா
Chiranjeevi 2024-05-28

ஐதராபாத், ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க நடிகர் சிரஞ்சீவி கோரிக்கை விடுத்துள்ளார். 

பழம்பெரும் நடிகரான என்.டி.ராமாராவ் 1982–ம் ஆண்டு முதல் ஆந்திர மாநில அரசியலில் தீவிரமாக ஈடுபட தொடங்கினார். தெலுங்கு தேசம் என்ற பெயரில் தொடங்கிய அவர், கட்சி தொடங்கிய 9 மாத காலத்திலேயே ஆட்சியை பிடித்தார். ஆந்திராவில் 3 முறை முதல்வராக  இருந்து உள்ளார். 

1996-ம் ஆண்டு என்.டி.ராமாராவ் காலமானார். தெலுங்கு மக்கள் இப்போதும் என்.டி.ராமாராவை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் என்.டி.ராமாராவின் 101-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு அவரது மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா, பேரன்கள் ஜூனியர் என்.டி.ஆர், கல்யாண் ராம் ஆகியோர் ஐதராபாத்தில் உள்ள என்.டி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு திரைப்பிரலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் அவருக்கு மரியாதை செலுத்தினர். 

இந்த நிலையில் என்.டி.ராமாராவின் 101-வது பிறந்த நாளையொட்டி நடிகர் சிரஞ்ச்சீவி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளாவது, 

 சிலரின் புகழ் என்றும் அழியாது. தலைமுறைகள் அவர்களை நினைவில் வைத்திருக்கும். வருங்கால சந்ததியினருக்கு என்.டி.ராமாராவ் ஒரு உதாரணம். இன்று அவரை நினைவுகூரும் போது, பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டால் பொது வாழ்வில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்குப் பொருத்தமான மரியாதையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். தெலுங்கு மக்களின் இந்த நீண்ட நாள் ஆசையை மத்திய அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து