முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம், வெள்ளி விலை சரிவு

வியாழக்கிழமை, 23 மே 2024      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் கணிசமாக குறைந்தது.

சர்வதேச அளவில் சீனா தங்கத்தை வாங்கி குவித்து வருவதால், கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சங்களை தொட்டு வருகிறது. கடந்த அட்சய திருதியை நாளன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 55 ஆயிரம் ரூபாயை கடந்து இருந்தது. இதைத் தொடர்ந்து சற்று குறைந்த தங்கத்தின் விலை மீண்டும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனால் தங்கத்தின் விலை மீண்டும் 55 ஆயிரம் ரூபாயை கடந்ததால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை வர்த்தகம் துவங்கியது முதலே தங்கத்தின் மீதான முதலீடுகள் பெருமளவில் குறைந்தது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,850ல் இருந்து 6,750 ரூபாயாக குறைந்தது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 110 ரூபாய் விலை குறைந்த நிலையில், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 880 ரூபாய் குறைந்தது. நேற்று முன்தினம் 54 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம், நேற்று 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

வெள்ளியின் விலையும் நேற்று கணிசமாக குறைந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெள்ளியின் விலை 100 ரூபாயை எட்டி இருந்தது. நேற்று முன்தினம் 100 ரூபாய் 30 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, நேற்று 3 ரூபாய் 30 பைசா குறைந்து 97 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளி 97 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து