எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குமரி, கன்னியாகுமரி பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு வேளைகளில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரியில் இன்று காலை கருமேகம் திரண்டு வானம் மப்பும் மந்தாரமாக காட்சி அளித்தது. கடல் சீற்றமாகவும் காணப்பட்டது.
இருப்பினும் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக வழக்கம்போல் இன்று காலை 7.45 மணிக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறை வளாகத்தில் அமைந்து உள்ள டிக்கெட் கவுண்டர் திறக்கப்பட்டு டிக்கெட் விநியோகம் நடந்து கொண்டிருந்தது. ஏராளமான சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கி கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. கடலும் சீற்றமாக காணப்பட்டது. இதனை கண்டு சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர். இதைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டனர்.
அதுமட்டுமின்றி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டியபடகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


