Idhayam Matrimony

மம்தா குறித்து சர்ச்சை கருத்து: பா.ஜ.க. வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை

செவ்வாய்க்கிழமை, 21 மே 2024      இந்தியா
Election 2024-04-15

Source: provided

புதுடெல்லி : தேர்தல் பிரச்சாரத்தின் போது மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறித்து அவதூறாக பேசிய டம்லுக் தொகுதியின் பாஜக வேட்பாளரான முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் 24 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் டம்லுக் தொகுதியில் பாஜக சார்பில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நீதிபதி பதவியை ராஜினாமா செய்த அவர், தற்போது தேர்தலில் போட்டியிடுகிறார். தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களிலும் அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கடந்த 15ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் போது பேசிய அபிஜித், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி குறித்து அவதூறாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

அவரது பேச்சுக்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு 17ம் தேதி அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில் 20ம் தேதி அதற்கு அவர் விளக்கம் அளித்து இருந்தார்.

இதனை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், அபிஜித்தின் பேச்சுக்கள் தேர்தல் விதிமுறைகளை மீறியது என முடிவு செய்தது. இதையடுத்து நேற்று மாலை 5 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு அபிஜித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொதுவெளியில் பேசும் போது கவனத்துடன் பேச வேண்டும் எனவும் அவரை தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து