முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னியாகுமரி கடற்கரையில் பகவதியம்மனுக்கு ஆறாட்டு

வியாழக்கிழமை, 23 மே 2024      ஆன்மிகம்
Kanyakumari-Bhagavathi-Amma

குமரி, கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி நேற்று காலை திரிவேணி சங்கம கடற்பகுதியில் அம்மனுக்கு ஆறாட்டு நடைபெற்றது.  

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை, சிறப்பு அன்னதானம், இந்து சமய சொற்பொழிவு, பாட்டு கச்சேரி, வாகன பவனி, சப்பர ஊர்வலம் ஆகியவை நடந்து வந்தன. 

அதைத் தொடர்ந்து 9-ம் நாள் விழாவான நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. மேள தாளம் முழங்க கோயிலில் இருந்து தேர் புறப்பட்டு ரதவீதியை சுற்றி வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். 

10-ம் திருவிழாவான நேற்று காலை 6 மணியளவில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் அம்மனுக்கு ஆறாட்டு நடைபெற்றது. இதையடுத்து ஆண்டில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டுமே திறக்கப்படும் கோயில் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியே அம்மன் கோயிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 

இந்த காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர். இதையடுத்து அம்மனுக்கு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து தெப்பத் திருவிழா நடந்தது. இத்துடன் வைகாசி விசாக திருவிழா நிறைவு பெற்றது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து