முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் அரசு கலைக் கல்லூரிகள் முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 10-ல் தொடக்கம்: ரேங்க் பட்டியல் வரும் 27-ம் தேதி வெளியீடு

வியாழக்கிழமை, 23 மே 2024      தமிழகம்
Student 2023-05-25

சென்னை, தமிழகம் முழுவதும் அரசு கலைக் கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில் முதல் கட்ட கலந்தாய்வு  ஜூன் 10-ல் தொடங்குகிறது. முன்னதாக ரேங்க் பட்டியல் வரும் 27-ம் தேதி வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. ஏற்கனவே கடந்த 20-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டன. இதையடுத்து வருகிற 27-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 10-ந் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 2-வது சுற்று ஜூன் 24 முதல் 29-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்த வருடமும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் சேருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் வணிகவியல், கணக்கு பதிவியல் பாடங்களில் 100-க்கு 100 எடுத்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டை விட போட்டி அதிகமாக உள்ளது. கடந்த வருடம் தேவையின் அடிப்படையில் 20 சதவீதம் இடங்கள் அதிகரிக்கப்பட்டன. அதுபோல இந்த ஆண்டும் குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து