முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயனர்களின் தரவுகளை ஏற்றுமதி செய்யும் வாட்ஸ் அப் நிறுவனம்: எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 25 மே 2024      உலகம்
Elon musk 2023-07-13

வாஷிங்டன், வாட்ஸ் அப் தனது பயனர்களின் தரவை ஒவ்வொரு இரவும் (விளம்பர நிறுவனங்களுக்கு) ஏற்றுமதி செய்கிறது என்று எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார். 

உலகப் பணக்காரரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான டிவிட்டரை விலைக்கு வாங்கி அதற்கு எக்ஸ் என பெயரிட்டதுடன் அதில் பல மாற்றங்களையும் செய்தார். பணக்காரராக மட்டும் இல்லாமல் உலகைப் பின்னியிருக்கும் சமூக வலைதளங்களை சொந்தமாக்கிக் கொள்ளும் அதிகார நகர்வாகவே எலான் மஸ்கின் இந்த முடிவு பார்க்கப்பட்டது. 

டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக இருக்கும் பேஸ்புக் வாட்சப் உள்ளிட்டவற்றை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க்குடன் அவ்வப்போது உரசல்களில் ஈடுபடுவதை எலான் மஸ்க் வழக்கமாக வைத்துள்ளார். இருவரும் குத்துச்சண்டை போட்டியில் மோத உள்ளதாக அறிவித்தது வரை இந்த உரசல் சென்றது. 

இந்நிலையில் வாட்ஸ் அப் குறித்து எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். டுவிட்டர் பயனர் ஒருவர் தனது பதிவில், வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளையும், சாட்'களையும்  விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த கருத்தை தனது டுவிட்டர் பதிவில் மேற்கோள் காட்டியுள்ள எலான் மஸ்க் , வாட்ஸ் அப் தனது பயனர்களின் தரவை ஒவ்வொரு இரவும் (விளம்பர நிறுவனங்களுக்கு) ஏற்றுமதி செய்கிறது. சிலர் இன்னும் வாட்ஸ் அப் பாதுகாப்பானது என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். 

எலான் மஸ்க்கின் இந்த குற்றச்சாட்டு குறித்து வாட்ஸ் அப் செயலியை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் இன்னும் எந்த கருத்தும்  தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து