முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராண்ட் செஸ் தொடர் : 6-வது முறை கார்ல்சன் சாம்பியன் : பிரக்ஞானந்தாவுக்கு 3-ம் இடம்

சனிக்கிழமை, 8 ஜூன் 2024      விளையாட்டு
Pragnananda 2023-08-25

Source: provided

ஓஸ்லோ : நார்வே செஸ் தொடரின் கடைசி சுற்றில் வெற்றிப் பெற்ற மேக்னஸ் கார்ல்சன் ஆறாவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். இந்தியாவின் பிரக்ஞானந்தாவுக்கு 3-ம் இடம் கிடைத்துள்ளது.

10 சுற்றுகள்...  

நார்வேயில் நடைபெற்ற சர்வதேச செஸ் தொடரில் ஐந்து முறை உலக சாம்பியன் வென்ற மேக்னஸ் கார்ல்சன் (நார்வே),  நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென் (சீனா), இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்றனர். 10 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில், ஆடவர் பிரிவில் மேக்னஸ் கார்ல்சென் 17.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். கடைசி சுற்றில் அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவிடம் மோதிய கார்ல்சென் கிளாசிக்கல் கேமில் டிரா ஆகி ஆர்கமெடானுக்கு சென்றது.

நகமுராவுக்கு 2-வது...

அதில் வென்ற கார்ல்சென் நார்வே செஸ் சாம்பியன் பட்டத்தை 6ஆவது முறையாகக் கைப்பற்றினார். கார்ல்சென் 17.5 புள்ளிகளுடன் முதலிடம் நகமுரா 15.5 புள்ளிகளுடன் 2-வது இடமும் இந்தியாவின் பிரக்ஞானந்தா 14.5 புள்ளிகளுடன் 3ஆவது இடமும் பிடித்துள்ளனர். நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார். 

வைஷாலி 4-வது...

2016ஆம் ஆண்டு முதன்முறையாக நார்வே செஸ் கிளாசிக்கல் கேமில் பட்டம் வென்ற கார்ல்சென் தொடர்ந்து 2019, 2020, 2021, 2022, 2024இல் பட்டம் வென்றுள்ளார். இடைப்பட்ட 2023ஆம் ஆண்டில் மட்டும் ஹிகரு நகமுரா பட்டத்தை வென்றார். மகளிர் பிரிவில் சீனாவின் ஜூ வென்ஜூன் 19 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் பெற்றார். மகளிர் பிரிவில் இந்தியாவின் வைஷாலி 12.5 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், கொனேரு ஹம்பி 10 புள்ளிகளுடன் 5ஆவது இடமும் பிடித்துள்ளனர்.

பரிசுத்தொகை எவ்வளவு?

நார்வேயின் பண மதிப்பில் 7 லட்சம் (இந்திய மதிப்பில் 54 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்) முதலிடம் பிடித்த கார்ல்செனுக்கு வழங்கப்பட்டது. இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.15 லட்சத்து 60ஆயிரம் வழங்கப்பட்டது. ஆடவர் பரிசுத் தொகை விவரங்கள்: 1.மேக்னஸ் கார்ல்சென் - ரூ.54,60,000, 2. ஹிகரு நகமுரா - ரூ. 27,30,000., 3. ஆர். பிரக்ஞானந்தா - ரூ.15,60,000., 4. அலிரீஜா ஃபிரௌஸ்ஜா - ரூ.13,26,000. 5. ஃபாபியோனா கரானா - ரூ. 11,70,000, 6. டிங் லிரென் - ரூ. 9,36,000. மகளிர் பரிசுத் தொகை விவரங்கள்: 1.வென்ஜுன் - ரூ.54,60,000, 2.முஸிஜுக் - ரூ. 27,30,000., 3.லீ டிங்ஜி - ரூ.15,60,000., 4.வைஷாலி - ரூ.13,26,000, 5.ஹம்பி - ரூ.11,70,000, 6.கிராம்லிங் - ரூ. 9,36,000.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து