எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் குறைந்த அளவில் மகப்பேறு மருத்துவர்கள் உள்ளனர் என்று மதுரையில் அ.தி.மு.க. மாநில மருத்துவரணி இணைச்செயளாலர் டாக்டர் பா. சரவணன் தெரிவித்தார்.
இது குறித்து அ.தி.மு.க. மாநில மருத்துவரணி இணைச்செயளாலர் டாக்டர் பா. சரவணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 9 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகிறது இதில் 55 சகவீதம் அரசு மருத்துவமனைகளும், 45 சதவீதம் தனியார் மருத்துவமனைகளில் பிரசவங்கள் நடைபெறுகிறது.
குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் தற்பொழுது 19,000 மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர் இதில் ஆயிரம் பேர் தான் மகப்பேறு மருத்துவர் உள்ளதாக கூறப்படுகிறது.இதன் மூலம் மகப்பேறு மருத்துவர்களுக்கு கூடுதலாக 3 முதல் 4 விழக்காடு பணிச்சுமை ஏற்படுகிறது.ஆனால் தனியார் மருத்துவமனைகளில் 10,000 பேர் அளவில் மகப்பேறு மருத்துவர்கள் உள்ளனர்.
பொதுவாக தமிழகத்தில 2000 மகப்பேறு மருத்துவர்கள் மருத்துவமனைகளில் கூடுதலாக நியமிக்கப்பட வேண்டும் அப்படி இருந்தால் தான் அரசு மருத்துவமனைகளில் மீது மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படும்.ஏற்கனவே செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டதால் மன்னார்குடியில் உள்ள மருத்துவமனையில் தூய்மை பணியாளரே நோயாளிக்கு ட்ரிப் போட்டது அனைவருக்கும் தெரியும்.இன்றைக்கு தமிழகத்தில் பிரசவங்களில் இறப்பு சதவீதம் குறைந்துள்ளதாக அமைச்சர் மா.சு. கூறுகிறார்,
கடந்த 10 ஆண்டுகளில் புரட்சித்தலைவி அம்மாவும், எடப்பாடியாரும் சுகாதாரத் துறையை சிறப்பாக செயல்படுத்திய காரணமாகத்தான் இந்த நிலையை எட்ட முடிந்தது. குறிப்பாக கடந்த எடப்பாடியார் ஆட்சி காலத்தில் மருத்துவத்துறையில் ஒரு புரட்சி ஏற்பட்டது, 11 அரசு மருத்துவக் கல்லூரியை திறந்து அதன் மூலம் 1450 கூடுதலாக மருத்துவ இடங்களை தமிழகத்தில் கிடைக்க செய்தார். தமிழகத்தில் அதிக அளவில் மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி காட்டிய பெருமை எடப்பாடியாரை சாரும்.
அதனை தொடர்ந்து 2019 ஒரு ஆய்வில் வெளியிட்ட தகவல்படி தமிழகத்தில் 253 நபர்களுக்கு ஒரு மருத்துவரும், இதேடெல்லி எடுத்துக் கொண்டால் 334 மக்களுக்கு ஒரு மருத்துவர், கர்நாடகாவை எடுத்துக் கொண்டால் 507 நபர்களுக்குஒரு மருத்துவர்,கேரளாவை எடுத்துக் கொண்டால் 535 நபர்களுக்கு ஒரு மருத்துவர், கோவா எடுத்துக் கொண்டால் 713 நபர்களுக்கு ஒரு மருத்துவர்,பஞ்சாபை எடுத்துக் கொண்டால் 787 நபர்களுக்கு ஒரு மருத்துவர், பீகாரை எடுத்துக் கொண்டால் 3,207 நபர்களுக்கு ஒரு மருத்துவர், உ.பியை எடுத்துக் கொண்டால் 3,767 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை இருந்தது. 2000 அம்மா மினி கிளினிக் மூலம் ஆண்டுதோறும் 25 லட்சம் மக்களை பயனடைய செய்தார் எடப்பாடியார் மத்திய அரசிடம் போராடி பெற்று தந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கூட தற்போது மருத்துவ பணியிடங்கள் காலியாக உள்ளது இதையெல்லாம் எதையும் செய்யாமல், எடப்பாடியார் செய்த திட்டங்களை, சாதனைகளை பின்பற்றி தங்கள் சாதனை போல சொல்லி வருகின்றனர்.
இனியாவது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் துணை மருத்துவமனைகள், வட்டார அளவில் உள்ள மருத்துவமனைகள், மாநகராட்சி பகுதியில் உள்ள மருத்துவமனைகளை சம்பந்தப்பட்ட அமைச்சர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு காலியாக உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணிஉதவியாளர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தங்கம், வெள்ளி விலை குறைவு
13 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வெள்ளிக்கிழமை குறைந்து விற்பனையானது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ.
-
காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்
13 Feb 2026சென்னை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
தோல்வி பயத்தால் ரூ.2000 தருவதாக முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
13 Feb 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையை அதிகரித்துள்ளார் என்று அ.தி.மு.க.
-
மகளிர் உரிமைத்தொகை குறித்த அரசின் அறிவிப்பால் வங்கிகளில் அலைமோதிய பெண்கள் கூட்டம்
13 Feb 2026சென்னை, தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை ரூ. 5 ஆயிரம் எடுக்க வங்கிகளில் நேற்று அலைமோதிய பெண்கள் கூட்டத்தால் வங்கி ஊழியர்கள் திணறினர்.
-
விஜய் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற வடமாநிலத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு
13 Feb 2026சேலம், சேலத்தில் நடந்த விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் மயக்கம் அடைந்த நபர் திடீர் என்று உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்று காதலர் தினம்: ரோஜா பூக்களின் விலை கடும் உயர்வு
13 Feb 2026போரூர், நாடு முழுவதும் இன்று காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ரோஜா பூக்களின் விலை கடும் உயர்ந்துள்ளது.
-
மோடியின் அரசியல் வாழ்க்கை: வைரலான அதிபர் ட்ரம்ப் பேச்சு
13 Feb 2026நியூயார்க், பிரதமர் நரேந்திர மோடியின் "அரசியல் வாழ்க்கையை அழிக்க நான் விரும்பவில்லை" என கடந்தாண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைர
-
திருவண்ணாமலையில் சோகம்: வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழப்பு
13 Feb 2026திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
13 Feb 2026பலூசிஸ்தான், பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
-
முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது: ஐகோர்ட்
13 Feb 2026சென்னை, முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என்று உயர் நீதமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளத
-
மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை: அமைச்சர்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை என்றும், சூரியனை எந்த கையாலும் மறைக்க முடியாது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
பல்வேறு தேர்வு வாரியங்கள் மூலம் தேர்வான 9,801 பேருக்கு புதிதாக பணிநியமன ஆணைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Feb 2026சென்னை, தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந



