முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 10,020 பழைய பஸ்கள் இந்த ஆண்டுக்குள் அகற்றப்படும் : அமைச்சர் சிவசங்கர் தகவல்

சனிக்கிழமை, 15 ஜூன் 2024      தமிழகம்
Sivashankar 2023-05-08

Source: provided

திருச்சி : தமிழகம் முழுவதும் தற்போது இயக்கத்தில் இருக்கும் 20,116 பழைய பேருந்துகளில் 10,020 பேருந்துகள் அடையாளம் காணப்பட்டு, இந்த ஆண்டுக்குள் அகற்றப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்கள் சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது., இ-பேருந்துகள், தாழ்தள பேருநதுகள், புனரமைக்கப்பட்ட மற்றும் மறுசீரமைக்கப்பட்ட பேருந்துகளை எரிவாயுவில் இயங்கும் பேருந்துகளாக மாற்றி இயக்கத்துக்குக் கொண்டு வருவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் 10,020 பேருந்துகள் ஈடு செய்யப்படும். போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், இப்பணிகள் இந்த ஆண்டுக்குள் முடிக்கப்படும். 

கடந்த 2006 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சியின் போது 15 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டன. தமிழக அரசின் கீழ் இயங்கும் 8 மண்டலங்களில் இயக்கப்படும் 10,020 பழைய பேருந்துகளை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது. அவை இந்த ஆண்டுக்குள் வெளியேற்றப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து