Idhayam Matrimony

கடைசி ஓவரில் திரில் வெற்றி: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ஆஸி.,

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2024      விளையாட்டு
16-Ram-52

Source: provided

நியூயார்க்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 35-வது போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங்கை செய்தது.

34 பந்துகளில்...

அந்த அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ஜார்ஜ் முன்செ 23 பந்துகளில் 35 ரன்களை அடுத்து அவுட் ஆனார். இவரடுன் களமிறங்கிய மைக்கேல் ஜோன்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பிரெண்டன் மெக்குல்லென் 34 பந்துகளில் 60 ரன்களை விளாசினார். இதில் 2 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.

180 ரன்கள் குவிப்பு...

அடுத்து வந்த கேப்டன் ரிச்சி பெரிங்டன் ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் 42 ரன்களை சேர்த்தார். இதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளையும், ஆஷ்டன் ஆகர், நாதன் எல்லிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

ஆரம்பமே அதிர்ச்சி...

181 ரன்களை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் டேவிட் வார்னர், கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இவர்கள் முறையே 1, 8 மற்றும் 11 ரன்களை எடுத்தனர்.

டிராவிஸ் ஹெட்....

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், துவக்க வீரரான டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். இவர் 49 பந்துகளில் 68 ரன்களை அடித்து அவுட் ஆனார். இவருடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கஸ் ஸ்டாயினிஸ் 29 பந்துகளில் 59 ரன்களை விளாசினார்.

5 விக்கெட்டுகள்...

பேட்டிங்கை தொடர்ந்து ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டது. ஸ்காட்லாந்து அணி போட்டியை கடைசி ஓவர் வரை கொண்டு சென்ற போதிலும், 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி 186 ரன்களை அடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஷரிஃப் - மார்க் வுட்...

ஆஸ்திரேலியா சார்பில் டிம் டேவிட் 14 பந்துகளில் 24 ரன்களுடனும், மேத்யூ வேட் 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஸ்காட்லாந்து சார்பில் சஃப்யன் ஷரிஃப் மற்றும் மார்க் வுட் தலா இரண்டு விக்கெட்டுகளையும், பிராட் வீல் 1 விக்கெட் வீழ்த்தினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து