முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்த த.வெ.க. தலைவர் விஜய்

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      தமிழகம்
Vijay-4 2023 06 17

Source: provided

சென்னை : இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார் த.வெ.க. தலைவர் விஜய்.

இஸ்லாமியர்களால் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தப்படியாக முஸ்லிம்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும். இறைவனின் தூதரான  இப்ராஹிமின்  தியாகத்தை போற்றும்  வகையில்  ஒவ்வொரு  ஆண்டும்  12-வது இஸ்லாமிய மாதமான துல் ஹஜ்ஜின் 10-வது நாளில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது.இந்த பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆண்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 

இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் வகையில் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாக திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து