எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : ஜெயலலிதா எடுத்த கொள்கை முடிவிற்கு மாறாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து விட்டோமே என்கிற மன உறுத்தல் எங்களுக்கு உள்ளது என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்தார்.
மதுரை மேற்குசட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கீழமாத்தூர் நாகதீர்த்தம் பகுதியில் நிலையூர் கால்வாயில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் 2 தடுப்பணைகள் கட்டுவதற்கான பூமிபூஜையை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். அருகில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, ஆர்.அண்ணாத்துரை, பா.குமார், பரவை ராஜா, கு.திரவியம், வி.பி.ஆர்.செல்வகுமார், பகுதி செயலாளர் வி.கணேசன், துவரிமான் ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பின்னர் மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது- அ.தி.மு.க. தலைவர்களும், தொண்டர்களும் தேர்தலை கண்டு அஞ்சுவதில்லை. தி.மு.க. தேர்தலுக்கு தேர்தல் புதுப்புது யுக்திகளை செயல்படுத்தி வருகிறது.
தி.மு.க. வாக்காளர்களை கவர்வதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு பணத்தை வழங்குகிறது.தி.மு.க. புதுக்கோட்டையில் மொய் விருந்து நடத்தியும், ஈரோடு கிழக்கில் வாக்காளர்களை அடைத்து வைத்து பணம் கொடுத்தது. மு.க.ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறுகிறார்.
இதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? காங்கிரஸ் கட்சியினர் ஏற்றுக்கொள்வார்களா? ஜனநாயகம் நிலைக்கப் போவதில்லை என தெரிந்தே விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிடவில்லை.தமிழகத்தில் தி.மு.க.விற்கு செல்வாக்கு கூடியுள்ளது என்றால் நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு இருக்க வேண்டும். தி.மு.க. கூட்டணியின் நாடாளுமன்ற தேர்தல் வெற்றி மக்களை விலைபேசி வாங்கப்பெற்ற வெற்றியாகும்.தி.மு.க.வுடன் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு கொள்கை கிடையாது.
தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கவில்லை.தி.மு.க. ஆட்சியில் மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இடைத்தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை. நம்பிக்கைதான் வாழ்க்கை மக்களின் மனநிலை மாறக்கூடியது.தி.மு.க. எத்தனையோ இடைத்தேர்தல் புறக்கணித்து உள்ளதே?, 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட்டால் அ.தி.மு.க.வும் தனித்து போட்டியிடும். ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வில் இருந்த காலகட்டத்திலும் தேர்தல்களில் தோல்வி அடைந்திருக்கிறோம்.
தி.மு.க. நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றும் என மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கக்கூடாது என மறைந்த முதல்வர் ஜெயலலிதா எடுத்த கொள்கை முடிவிற்கு மாறாக கூட்டணி வைத்து விட்டோமே என்கிற உறுத்தல் எங்களுக்கு உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வாக்குகளை வைத்து தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்து விட்டது என கூற முடியாது.எத்தனை தேர்தல்கள் வந்தாலும் எந்த காலத்திலும் பாரதி ஜனதா கட்சி தமிழகத்தை ஆள முடியாது.
பா.ஜ.க. தமிழகத்தில் மதவாதத்தை முன் வைப்பதால் வெற்றி பெற முடியாது.எம்.ஜி.ஆர். போல சம்பாதித்த பணங்களை மக்களுக்கு கொடுக்க நினைக்கிறார் நடிகர் விஜய், நடிகர் விஜய் எனும் இளைஞர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் தான் அவருடைய கொள்கை செயல்பாடுகள் தெரிய வரும்.நடிகர் விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் நல்லது தான். கூட்டணி பேச்சு வார்த்தைகள் எல்லாம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.
-----------------------------------------------
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
போராட்டக்காரர்கள் மீதான நடவடிக்கை: மக்களிடம் மன்னிப்பு கோரினார் ஈரான் அதிபர்
11 Feb 2026தெஹ்ரான், ஈரான் அரசுக்கு எதிராகப் போராடிய மக்கள் மீதான கடுமையான நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார்.
-
புதுச்சேரியில் இன்று சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்
11 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி அரசின் சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறும். இந்த ஆண்டு திரைப்பட விழா சர்வதேச திரைப்பட விழாவாக மாற்றம் பெற்றுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –11-02-2026
11 Feb 2026 -
பாக்.கை கழிப்பறை காகிதத்தை போல பயன்படுத்தினர்: அமெரிக்கா மீது ஆசிப் கவாஜா குற்றச்சாட்டு
11 Feb 2026இஸ்லாமாபாத், கழிப்பறை காகிதத்தைப் போல பாகிஸ்தானை அமெரிக்கா பயன்படுத்தியது என்றும், பாகிஸ்தான் தனது தவறுகளை ஏற்கவில்லை என்றும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப
-
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் நிலை என்ன? கனிமொழி எம்.பி. கேள்வி
11 Feb 2026சென்னை, சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழும் மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும், ஆனால் பா.ஜ.க.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
11 Feb 2026புதுடெல்லி, எந்தவொரு பிரதமரும் இப்படி செய்யமாட்டார் என இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
-
இந்தியா - பாக்., போர் குறித்து 80-வது முறையாக ட்ரம்ப் பேச்சு
11 Feb 2026நியூயார்க், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை கடந்த ஆண்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
கூட்டணி அரசு அமைவதில் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை: காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கருத்து
11 Feb 2026சென்னை, கூட்டணி கட்சிகள் அமைவதில் தமிழக மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி முக்கிய தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள்: இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் குறித்து மக்களவையில் ராகுல் கடும் குற்றச்சாட்டு
11 Feb 2026புதுடெல்லி, நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள். இந்தியாவை விற்றதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
11 Feb 2026- இராமேஸ்வரம் சுவாமி அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் புறப்பாடு.
- வேதாரண்யம் சிவபெருமான் விழா தொடக்கம்.
- திரோகர்ணம், காளஹஸ்தி கோவில்களில் சிவபெருமான் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
11 Feb 2026


