முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஸ் கட்டண உயர்வு குறித்து எந்த தகவலும் வரவில்லை : அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

புதன்கிழமை, 17 ஜூலை 2024      தமிழகம்
Sivashankar 2023-05-08

Source: provided

சென்னை : பேருந்து கட்டணம் உயர்வு குறித்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் கோவை மண்டலம் சார்பில் 20 புறநகர் மற்றும் 1 நகர்ப்புற பேருந்தை தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் புதிய பேருந்துகளை துவக்கி வைத்த அமைச்சர் பல்வேறு போக்குவரத்து கழக உறுப்பினர்களுடன் கலந்துரையாடி கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறும்போது, “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின்கீழ் இயங்கும் பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் இயக்க முதல்வர் நிதி ஒதுக்கி பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக சுமார் 1000 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின்பு இப்போது புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 11ஆம் தேதி முதல்வர் தர்மபுரியில் 11 புதிய பேருந்துகளை இயக்கி துவக்கி வைத்தார். அதேபோல 15 ஆம் தேதி திருவள்ளூரில் 10 பேருந்து துவக்கி வைத்தார். மதுரை, விருதுநகர் போன்ற பகுதிகளில் புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து (நேற்று) கோவையில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு உள்பட்ட கோவை மண்டலத்தில் 21 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், 20 புறநகர் பேருந்துகளும் ஒரு நகர்ப்புற பேருந்தும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதையல்லாமல் கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உள்பட்ட உதகை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளிலும் புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.மொத்தம் 7,200 புதிய பேருந்துகள் தமிழக அரசால் வாங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட இருக்கிறது. அதில் முதல் கட்டமாக 1000 பேருந்துகள் தேர்தலுக்கு முன்பாகவும், இந்த வாரத்திற்குள் 300 பேருந்துகளும் பயன்பாட்டிற்கு வர உள்ளன. அதனைத் தொடர்ந்து புதிய பேருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள் பேருந்துகளை வழங்க வழங்க மக்கள் பயன்பாட்டிற்கு படிப்படியாக கொண்டுவரப்படும்.பழைய பேருந்துகளை மாற்றுவதற்கான நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மின்சாரத்தில் இயங்கும் 500 பேருந்துகள் வாங்குவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு, முதல் 100 பேருந்துகளுக்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் முடிக்கப்பட்டு முதல் 100 பேருந்துகள் சென்னையிலும், அடுத்த 400 பேருந்துகள் கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் பயன்பாட்டிற்கு வரும். மாறி வருகின்ற கால சூழ்நிலை மற்றும் தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப வேகமாக இயங்கும் பேருந்துகள் வரவுள்ளது. 

பேருந்து கட்டண உயர்வு குறித்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. மின் கட்டணம் உயர்வு தொடர்ந்து பேருந்து கட்டணம் உயர்வு குறித்து எதிர்கட்சிகள் புகாருக்கு, அவர்கள் விருப்பம் அதுவாக இருந்தால் அதற்கு பதில் கூற தயாராக இல்லை. ஆம்னி பேருந்துகள் கட்டணம் யாராலும் நடைமுறைப்படுத்தும் விஷ்யம் இல்லை, ஒவ்வொரு முறையும் ஆம்னி பேருந்துகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆம்னி சங்கத்தில் இல்லாதவர்கள் கட்டணம் அதிகமாக பெறுகிறார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து