முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கியை காட்டி மிரட்டல்: ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தாய் கைது

வியாழக்கிழமை, 18 ஜூலை 2024      இந்தியா
Gun 2023 04 17

மும்பை, உள்ளூர் விவசாயிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய விவகாரத்தில்  ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா கேத்கரின் தாயார் மனோரமாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகராஷ்டிராவைச் சேர்ந்த பூஜா கேத்கர் என்ற இளம்பெண் யு.பி.எஸ்.சி., தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது இடத்தை பிடித்தார். பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த அவர், புனே உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார். அரசால் வழங்கப்படாத வசதிகளை இவர் அத்துமீறி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தன் சொகுசு காரில் அரசு பெயர் பலகை மற்றும் சிவப்பு - நீல சுழல் விளக்கு பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. விதிமீறலில் ஈடுபட்டதை அடுத்து பூஜா, வாஷிம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

ஐ.ஏ.எஸ்.பணியில் சேர்ந்த போது, உடல் ரீதியான குறைபாடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான சான்றிதழ்களை முறைகேடாக சமர்ப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு நபர் கமிஷனை சமீபத்தில் அமைத்தது. 

அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழவே, பூஜா கேத்கரின் பயிற்சியை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.  இந்நிலையில், அடுத்த சர்ச்சையில் பூஜா சிக்கியுள்ளார். மகராஷ்டிராவில் உள்ள பல்கோன் கிராமத்தின் ஊர் தலைவராக பூஜாவின் தாய் மனோரமா உள்ளார். 

அவரும், அவரது கணவரும் நிலப்பிரச்னையில் உள்ளூர் விவசாயிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ  வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து மனோரமா தலைமறைவானார். அவர்களைப் பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மகராஷ்டிரா போலீசார் தெரிவித்தனர். 

இந்த நிலையில் மஹாத் என்ற இடத்தில் உள்ள ஓட்டலில் மனோரமாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை திலீப் கேத்கர் இன்னும் தலைமறைவாக உள்ளார்.  திலீப் கேத்கர் மகராஷ்டிரா அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் பணியாற்றிய போது, ஊழல் புகாரில் 2018 மற்றும் 2020 ஆண்டுகளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து