முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி நினைவு நாள்: வரும் 7-ம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Kalangar

சென்னை, வரும் 7-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவுநாளையொட்டி சென்னையில் தி.மு.க. சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில்  அமைதி பேரணி நடக்கிறது. 

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினம் வருகிற 7-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பல்வேறு கட்சித்தலைவர்கள், பொது மக்கள் வருகை தருவார்கள் என்பதால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் அமைதிப் பேரணி செல்கின்றனர். அன்றைய தினம் காலை 7 மணிக்கு அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலை அருகில் இருந்து அமைதிப் பேரணி புறப்பட்டு காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் சென்றடைகிறது.

அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட தி.மு.க. முன்னணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்கின்றனர்.

இதில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள், இன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைக் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக, பகுதி கழக, வட்டக்கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, இலக்கிய அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, மகளிர் தொண்டர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி உள்பட அனைத்து அணியினரும் கருணாநிதியின் நினைவை போற்றி அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர் என சென்னை கிழக்கு, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு ஆகிய மாவட்ட கழகங்களின் சார்பில் மாவட்ட செயலாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து