முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6,000 கனஅடியாக அதிகரிப்பு

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2024      தமிழகம்
Bhavanisagar-Dam 2023 08 19

ஈரோடு, நீலகிரியில் பரவலாக மழை பெய்ததால் 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து 6,431 கன அடியாக அதிகரித்துள்ளது. 

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. 

பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பவானிசாகர் அணையில் இருந்து தொடர்ந்து நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவு நீர் திறக்கப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரியில் பரவலாக மழை பெய்ததால் நேற்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 6,431 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 

நேற்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணை நீர்மட்டம் 95.78 அடியாக உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி, தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 750 கனஅடி, காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,300 கனஅடி என மொத்தம் 3,350 கனஅடி தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு வருகிறது.

இதே போல் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது. 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 40.38 அடியாக உள்ளது. 

இதே போல் 33.47 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 33.17 அடியாக உயர்ந்து உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து