முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோவில் அருகே அ.தி.மு.க. பிரமுகர் கொலை

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2024      தமிழகம்
Veliyappan 2024-09-08

Source: provided

தென்காசி : சங்கரன்கோவில் அருகே அ.தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெளியப்பன் (49). அ.தி.மு.க. பிரமுகரான இவர் அரசு ஒப்பந்ததாரர் ஆவார். இவரது மனைவி மாரிச்செல்வி, மேலநீலிதநல்லூர் ஒன்றியக்குழு முன்னாள் துணை தலைவராக பதவி வகித்துள்ளார்.

வெளியப்பன் மேலநீலிதநல்லூரில் தினமும் காலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று  காலையில் வழக்கம்போல் நடைப்பயிற்சி சென்றபோது, அங்கு வந்த மர்ம கும்பல் வெளியப்பனை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பனவடலிசத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்வவ இடத்துக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.ஸ்ரீனிவாசன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவில் வெளியப்பன் தரப்பினருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில் வெளியப்பன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து