முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொறியியல் படிப்பில் 15 ஆயிரம் மாணவர்கள் கூடுதல் சேர்க்கை: அமைச்சர் பொன்முடி தகவல்

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2024      தமிழகம்
ponmudi 2023-07-06

சென்னை, இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் 15 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள  உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தமிழக மாணவர்கள் இரு மொழி கொள்கையைத்தான் விரும்புகிறார்கள், விருப்பம் இருந்தால் அவர்கள் மூன்றாவது மொழியை படிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், சென்னை நகரில் உள்ள கல்லூரி முதல்வர்கள், மண்டல இணை இயக்குநர்கள் ஆகியோருடனான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்.

கூட்டத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது: கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் 15 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் வரும் 23 ஆம் தேதி வரை மாணவர்கள் நேரடி வளாக சேர்க்கை மூலம் சேரலாம். பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை மூலம் நடைபெறுகிற பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடைபெறுவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் போலியாக பேராசிரியர்கள் கணக்கு காட்டிய விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை பெற்ற பின்னர் அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு நிதியை நிறுத்தி வைத்திருப்பது அரசியலுக்காக தான் என தெரிவித்த அவர், தமிழகத்தை பொறுத்தவரை மாணவர்கள் மும்மொழி கொள்கையை காட்டிலும் இருமொழி கொள்கையைத்தான் விரும்புகிறார்கள், விருப்பம் இருந்தால் அவர்கள் மூன்றாவது மொழியை படிக்கலாம். மேலும் மலையாளம், ஹிந்தி போன்ற பிரிவுகள் இருக்கக்கூடிய கல்லூரிகளில் அந்தப் பிரிவுகளில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் சேர்வதாகவும் அமைச்சர் பொன்முடி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து