முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட் கோலி பதிவு வைரல்

வியாழக்கிழமை, 16 அக்டோபர் 2025      விளையாட்டு
16-Ram-95

Source: provided

இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி  இரு பிரிவுகளாக புறப்பட்டது. தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றடைந்தது. முதலில் ஒருநாள் தொடர் நடக்கிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற 19-ந் தேதி நடக்கிறது. 

இந்த தொடருடன் கோலி ஓய்வு அறிவிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி ரசிகர்களிடையே பேசும் பொருளாக உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றடைந்த இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்று வைத்துள்ளார். அதில் "நீங்கள் உண்மையிலேயே தோல்வி அடைவது, நீங்கள் விட்டுக்கொடுக்க முடிவு செய்யும் போதுதான் என பதிவிட்டிருந்தார். இது தற்போது வைரலாகி வருகிறது.

குல்தீப் யாதவ் முன்னேற்றம்

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதல் 4 இடங்களில் ஜோ ரூட், ஹாரி புரூக் (இங்கிலாந்து), வில்லியம்சன் (நியூசிலாந்து), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா) ஆகியோர் தொடருகிறார்கள். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் 175 ரன்கள் குவித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இரு இடம் முன்னேறி மறுபடியும் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதல் 10 இடங்களில் மாற்றமில்லை. இந்தியாவின் பும்ரா ‘நம்பர் ஒன்’ ஆக வலம் வருகிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 7 இடங்கள் உயர்ந்து தனது சிறந்த நிலையாக 14-வது இடத்தை பிடித்துள்ளார்.

பாக்., அணிக்கு புதிய கேப்டன்?

டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியை சல்மான் அகா கேப்டனாக வழிநடத்தி வருகிறார். அணியின் துணைக் கேப்டனாக ஷதாப் கான் செயல்படுகிறார். காயம் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு துணைக் கேப்டனான ஷதாப் கானுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் சில மாதங்களாக ஓய்வில் இருந்த ஷதாப் கான் மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ளார். காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட உள்ள நிலையில், டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக ஷதாப் கான் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

ஆல்ரவுண்டரான ஷதாப் கான் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 70 ஒருநாள் மற்றும் 112 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர். கடந்த ஜூனில் சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் கடைசியாக அவர் விளையாடியிருந்தார். அதன் பின், தோள்பட்டை காயம் காரணமாக அவரால் விளையாட முடியவில்லை. இந்த நிலையில், டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணிக்கான புதிய கேப்டனாக ஷதாப் கான் நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸி. - இங்கி. வீரர்கள் மோதல்

முன்னாள் வீரர்களான டேவிட் வார்னர், ஸ்டூவர்ட் பிராட் ஆஷஸ் தொடர் குறித்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆஷஸ் தொடர் வருகிற நவ.21ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த் திடலில் தொடங்குகிறது. ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி வரும் நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் நவ.21ஆம் தேதி முதல் போட்டியும் ஜன.4ஆம் தேதி கடைசி போட்டியும் நடைபெற இருக்கின்றன. இதுவரை நடந்த 73 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 34 முறையும் இங்கிலாந்து 32 முறையும் வென்றிருக்கின்றன. இன்னும் 50க்கும் குறைவான நாள்களே உள்ள நிலையில் இரு நாட்டு வீரர்களும் இதுகுறித்து பேசத்தொடங்கியுள்ளனர்.

முன்னாள் ஆஸி. வீரர் டேவிட் வார்னர் இது பற்றி பேசியதாவது: கம்மின்ஸ் இல்லையென்றால் 3-1 எனவும் கம்மின்ஸ் இருந்தால் 4-0 எனவும் ஆஸ்திரேலியா வெல்லும். கம்மின்ஸ் இல்லாவிட்டால் முதல் டெஸ்ஸ்டை இங்கிலாந்து வெல்லாம். நாங்கள் ஆஷஸ் தொடரை வெல்வதற்காக விளையாடுவோம். அவர்கள் எப்போதும்போல தார்மீக வெற்றிக்காக விளையாடுவார்கள் என்றார். இங்கிலாந்து அணி தொடர்களில் தோற்கும்போதெல்லாம் இந்த வார்த்தையைச் சொல்லி ஏமாற்றுவதைக் கிண்டல் செய்யும் வகையில் வார்னர் பேசியிருந்தார்.

டேவிட் வார்னரின் இந்தப் பேச்சுக்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டீவர்ட் பிராட் பதிலடி தந்துள்ளார். அவர் பேசியதாவது: 2010க்குப் பிறகு இருப்பதிலேயே மிகவும் பலவீனமான அணியாக ஆஸ்திரேலியா இருக்கிறது. இது வெறுமனே ஒரு கருத்து அல்ல, உண்மை இதுதான். கடைசியாக 2010-இல் இங்கிலாந்து வென்றிருந்தது. தற்போது இருக்கும் இங்கிலாந்து அணி 2010-க்குப் பிறகான சிறந்த அணியாக இருக்கிறது என்றார். ஆஷஸ் தொடர் குறித்து, இரு நாட்டு வீரர்களும் மாறிமாறி கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

லக்னோ அணியில் வில்லியம்சன்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன். இவர் 2016-ம் ஆண்டு நியூசிலாந்து அணியின் 3 வடிவிலான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றார். மொத்தமாக, அவர் 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் கேப்டனாக இருந்து, 105-107 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். அவர் ஐபிஎல் தொடரில் 2015-ம் ஆண்டு அறிமுகமாகி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) மற்றும் குஜராத் டைடன்ஸ் (GT) அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

அவர் சமீபத்திய 2024 சீசனில் குஜராத் டைடன்ஸ் அணிக்காக 2 போட்டிகளில் மட்டும் விளையாடினார் (மொத்தம் 27 ரன்கள்), மேலும் 2025 சீசனுக்கு மெகா ஆக்சனில் எந்த அணியாலும் தேர்வு செய்யப்படாத நிலையில் லக்னோ அணியின் ஸ்ட்ராடெஜிக் அட்வைசராக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆர்ஜென்டீனா இறுதிக்கு தகுதி

யு-20 உலகக் கோப்பைக்கான அரையிறுதியில் ஆர்ஜென்டீனாவும் கொலம்பியாவும் மோதின. இந்தப் போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் மேடியோ சில்வெட்டி கோல் அடித்து அசத்தினார். இவர் சமீபத்தில் மெஸ்ஸி விளையாடும் இன்டர் மியாமி அணியில் சேர்ந்ததும் குறிப்பிடத்தக்கது. மற்றுமொரு அரையிறுதியில் பிரான்ஸ், மொராக்கோ அணிகள் மோதின. அந்தப் போட்டி 1-1 என சமநிலையில் முடிய ஆட்டம் பெனால்டி ஷுட் அவுட்டுக்குச் சென்றது. அதில் மொராக்கோ 5-4 என த்ரில் வெற்றி பெற்றது.

யு-20 உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் மொராக்கோ அணியும் ஆர்ஜெண்டீனாவும் அக்.20ஆம் தேதி காலை 4.30 மணிக்கு மோதவிருக்கிறது. ஆடவர் கால்பந்து உலகக் கோப்பையை 2022ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனா வென்றது. அதேபோல் யு-20 உலகக் கோப்பையிலும் ஆதிக்கம் செலுத்துமா என அதன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து