முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் உயர்வு: சட்டசபையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்

வியாழக்கிழமை, 16 அக்டோபர் 2025      தமிழகம்
Chakkara-Pani 2023-04-27

சென்னை, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் 3-ம் நாள் கூட்டம் நேற்று தொடங்கியது. இந்நிலையில், ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இது குறித்து சட்டபேரவையில் பேசும்போது: டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் நெல் குறுவை சாகுபடியானது கடந்த ஆண்டு 3.5 லட்சம் ஏக்கராக இருந்தது. தற்போது 6.31 லட்சம் ஏக்கராக உள்ளது. இது வரலாற்று சாதனையாக உள்ளது. 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 13 மடங்கு நெல் உற்பத்தி வரத்து அதிகரித்துள்ளது. முதல்வர் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி ஒரு ஆய்வு கூட்டத்தை நடத்தினார். அப்போது டெல்டா மாவட்டங்களுக்கு சென்று உடனடியாக விவசயிகள் உற்பத்தி செய்துள்ள நெல்லை பெற்று அதை சேமித்து வைத்து மற்ற மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்தார். அதனடிப்படையில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்கள் அறுவை ஆலைகளுக்கு துரிதமாக அனுப்பப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டதை விட, திமுக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு அதிகளவிலான சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் 3.3 லட்சம் மெட்டிக் டன் கொள்ளவு கொண்ட 25 திறந்த வெளி சேமிப்பு கிடங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு 77.196 மெட்டிக் டன் சேமித்து வைக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து