முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகளவில் போர் மற்றும் பெருந்தொற்று ஏற்படக்கூடும் : எச்சரிக்கிறார் பில்கேட்ஸ்

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2024      உலகம்
bill-Gates 2023 08 08

Source: provided

வாஷிங்டன் : பருவ நிலை மாற்றம் மற்றும் சைபர் தாக்குதல்கள் குறித்து அடிக்கடி எச்சரித்து வந்த மைக்ரோசாப்ட் நிறுவனரும், நன்கொடையாளருமான பில்கேட்ஸ், தற்போது, சர்வதேச அளவில் போர் மற்றும் பெருந்தொற்று ஏற்படக்கூடும் என எச்சரித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இன்றைய உலகில் சில இடங்களில் ஏற்பட்டு உள்ள பதற்றமானது மற்றொரு பெரிய போருக்கு வழிவகுக்கக் கூடும். ஒருவேளை இதனை நாம் தவிர்க்க முயன்றாலும், மற்றொரு பெருந்தொற்று ஏற்படலாம். இது அடுத்த 25 ஆண்டுகளில் ஏற்படக் கூடும்.

உலகளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தாலும், அது நாம் எதிர்பார்த்ததை விடக்குறைவு. எதில் நாம் அதிகம் கற்றுக்கொண்டோம். எங்கு பிரச்னை உள்ளது என்பதை நமது செயல்பாடுகள் முழுமையாக பிரதிபலிக்கவில்லை. 

ஒரு வேளை இது அடுத்த 5 ஆண்டுகளில் இது மேம்படும். ஆனால், இதுவரை அது இல்லாதது ஆச்சர்யம் அளிக்கிறது. உலகத்தை வழிநடத்தும் மற்றும் முன்மாதிரியாக இருக்கும் என அமெரிக்கா மீது எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அதற்கேற்ப அந்நாடு செயல்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து