முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்காட்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம்

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2024      விளையாட்டு
3-Ram-53

Source: provided

சார்ஜா; பெண்கள் டி20 உலகக் கோப்பை முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்றது.

வங்கதேசம் பேட்டிங்...

9-வது பெண்கள் உலகக் கோப்பை தொடர் அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நேற்று தொடங்கியது. வருகிற 20-ந்தேதி வரை நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் நேற்று சார்ஜாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வங்காளதேசம்- ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நிகர் சுல்தானா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது . தொடக்க வீராங்கனைகளாக ஷாதி ராணி , முர்ஷிதா ஆகியோர் களமிறங்கினர். முர்ஷிதா 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

119 ரன்கள்...

தொடர்ந்து சிறப்பாக விளையாடி ஷாதி ராணி 29 ரன்களுக்கு வெளியேறினார் தொடர்ந்து களமிறங்கிய தேஜ் நேகர் ரன் எதுவும் எடுக்காமலும் , நிகர் சுல்தானா 18 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். வங்காளதேச அணியில் நிலைத்து விளையாடிய ஷோபனா 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. ஸ்காட்லாந்து அணியில் சசிகலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 120 ரன்கள் இலக்குடன் ஸ்காட்லாந்து அணி விளையாடியது.

7 விக்கெட்...

தொடக்கம் முதல் வங்காளதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி தடுமாறியது இதனால் ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.  ஸ்காட்லாந்து அணியில் சாரா பிரைஸ் 49 ரன்கள் எடுத்தார். இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்றது . 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து