எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கோவை : கோழிக்கோடு செல்லவிருந்த துபாய் விமானம் ஒன்று, கோவையில் தரையிறங்கியதால் திடீர் பரபரப்பு நிலவியது.
துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி ப்ளை துபாய் நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 164 பயணிகள் இருந்தனர். கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்க விமானம் தயாரானது.
அப்போது வானிலை மிகவும் மோசமாக இருந்தது. அதன் காரணமாக அரை மணி நேரமாக அந்த விமானம் வானிலேயே வட்டம் அடித்தது. வானிலை சீராகாமல் இருந்ததால் பாதுகாப்பு கருதி விமானம், கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
இதையடுத்து, நேற்று காலை 7.45 மணியளவில் விமானம் தரையிறங்கியது. திடீரென கோவை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதால் பயணிகள் சிறிதுநேரம் புரியாமல் குழம்பி போயினர். பின்னர் நிலைமை அறிந்து சமாதானம் ஆகினர்.
இதையடுத்து விமான நிலையத்தில் பயணிகளுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படும் என்று விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வானிலை சீரான பின்னர், மீண்டும் விமானம் கோழிக்கோடு விமான நிலையம் புறப்பட்டு செல்லும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மோசமான வானிலையால் கோழிக்கோடு செல்லவேண்டிய விமானம், கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து சார்ஜா சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருச்சி விமான நிலையத்தில் 2 மணி நேரம் வானில் வட்டமடித்து பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. அந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் அது போன்ற சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025