எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜம்மு, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹல்கன் கலி பகுதியில் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையைத் தொடங்கியதை அடுத்து இந்த மோதல் வெடித்தது. இந்திய ராணுவமும், ஐம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் ஸ்ரீநகர் செக்டார் சிஆர்பிஎஃப் இணைந்து ஹல்கன் காலி, அனந்த்நாக் பகுதியில் ஒரு கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
ஹல்கன் காலி அருகே சந்தேசத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து சம்பவ இடத்தை சுற்றிவளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதன் விளைவாக இரண்டு பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றனர். ஸ்ரீநகரின் கன்யார் பகுதியில் இதேபோன்ற துப்பாக்கிச்சூடு நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இது நடந்தது. முன்னதாக காலை, ஸ்ரீநகரின் கைனார் பகுதியில் போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு சுற்றிவளைத்துத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளில் ஒருவர் வெளிநாட்டவர் என்பதும், மற்றோரு நபர் உள்ளூரைச் சேர்ந்தவர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிவதற்கான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதே போல், ஸ்ரீநகரின் கன்யார் பகுதியிலும் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளிடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
10 Feb 2026- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மர் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- இராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கைலாச வாகனம், அம்பாள் தங்க சிம்ம வாகனம்.
-
இன்றைய ராசிபலன்
10 Feb 2026 -
இன்றைய நாள் எப்படி?
10 Feb 2026


