முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபி தொடர்: ஓரிரு நாளில் இந்திய அணி அறிவிப்பு

திங்கட்கிழமை, 13 ஜனவரி 2025      விளையாட்டு
India 2024-01-29

Source: provided

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் பங்கேற்கிறது. 

முன்னணி வீரர்கள் காயம்...

இதனிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணிகளை ஜனவரி 12-ம் தேதிக்குள்  அறிவிக்க வேண்டும் என 8 நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கும் ஐ.சி.சி. அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்திய அணி குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வீரர்களின் பட்டியலை தயார் செய்யவில்லை. பும்ரா உள்ளிட்ட சில முன்னணி வீரர்கள் காயத்தில் சிக்கியுள்ளதால் தேர்வு செய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது. இதனால் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என பி.சி.சி.ஐ சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) கோரிக்கை வைத்தது.

18 அல்லது 19-ம் தேதிக்குள்...

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி வரும் 18 அல்லது 19-ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜிவ் சுக்லா தகவல் தெரிவித்துள்ளார். அன்றைய தேதிகளில் இந்திய அணி தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேர்வு குழு கூட்டம் நடைபெற்று விவரங்கள் வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து