எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அ.தி.மு.க. உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில் ஈரோடு கிழக்கில் இருமுனை போட்டி மட்டும் நிலவுவதால் அங்கு தி.மு.க. - நாம் தமிழர் கட்சிகள் நேரடியாக மோதவுள்ளது உறுதியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நேற்று (வெள்ளிக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாள். முக்கிய வேட்பாளராக போட்டியிடும் தி.மு.க.வின் வி.சி.சந்திரகுமார் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து களம் இறங்கும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியும் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவர்களுடன் மேலும் சில சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்தார்கள்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஆளும் கட்சியான தி.மு.க. இன்டியா கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளரை நேரடியாக களம் இறக்கி உள்ளது. தி.மு.க. தொண்டர்களை பொறுத்தவரை கட்சியின் இந்த முடிவு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி கடந்த 2021-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. 2026-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் இந்த தொகுதியை காங்கிரசிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் தி.மு.க.வினர் தீவிரமாக இருந்தனர். அதற்கு இந்த இடைத்தேர்தலில் வேட்பாளர் மாற்றம் தி.மு.க.வினருக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது.
ஆளும் தி.மு.க. வேட்பாளரை அறிவித்த நிலையில் முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. போட்டியில் இருந்து விலகி இருப்பது அதி.மு.க. அடிமட்ட தொண்டர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்சி தலைமையின் முடிவு என ஏற்றுக்கொண்டாலும், வரும் பொதுத்தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற முழு மூச்சில் போராடும். அதி.மு.க.வை தொடர்ந்து தே.மு.தி.க.வும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது.
இதுபோல் பா.ஜ.க. கூட்டணியும் தேர்தலை புறக்கணித்து உள்ளது. இந்த கூட்டணியில் உள்ள த.மா.கா. கடந்த பொதுத்தேர்தலில் முக்கிய கட்சியாக போட்டியிட்டு 2-ம் இடத்தை பிடித்தது. கடந்த 2023-ம் ஆண்டு இடைத்தேர்தலில் தொகுதியை தங்கள் கூட்டணி கட்சியான அதி.மு.க.வுக்கு விட்டுக்கொடுத்தது. இந்த முறை போட்டியில் இருந்தே விலகி உள்ளது. பாஜக கூட்டணியின் இந்த முடிவு அரசியல் பார்வையாளர்களால் ஏற்கனவே கணிக்கப்பட்டதாக இருந்ததால் இந்த முடிவு வாக்காளர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கவில்லை.
முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி நாம் தமிழர் கட்சி தனது வேட்பாளரை அறிவித்தது. இதனால் தி.மு.க.வுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சி என்கிற இடத்தை நாம் தமிழர் கட்சி பிடித்துள்ளது. இது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை நடந்த தேர்தல்களில் கணிசமாக வாக்கு பெற்றாலும் 3-வது அல்லது 4-வது இடம் என்ற நிலை, இந்த இடைத்தேர்தலில் 2-வது இடம் என்ற அளவுக்கு மாறும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, நாம் தமிழர் கட்சிக்கு தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள், அதி.மு.க., பாஜக கூட்டணி வாக்குகள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால் தேர்தல் முடிவை மாற்றும் வாய்ப்பும் உள்ளது.
கடந்த சில பொதுத்தேர்தல்களாக 4 முனை, மும்முனை போட்டிகளை பார்த்த வாக்காளர்கள் இந்த முறை இருமுனை போட்டியை சந்திக்க உள்ளனர். இதனால் ஈரோடு இடைத்தேர்தல் சரவெடியாக இருக்குமா? அல்லது மந்தமான நிலையில் இருக்குமா? என்பது அடுத்து வரும் நாட்களில்தான் தெரியும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-02-2025.
11 Feb 2025 -
'வீட்டுக்கு ஒரு ஓட்டு' விஜய்க்கு வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர்
11 Feb 2025சென்னை: 'வீட்டுக்கு ஒரு ஓட்டு' என்ற அடிப்படையில் விஜய் கட்சிக்கு வாக்குகளை கைப்பற்ற பிரசாந்த் கிஷோர் வியூகம் வகுத்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
-
ராமர் நடிக்கும் அது வாங்குனா இது இலவசம்
11 Feb 2025ஸ்ரீஜா சினிமாஸ் தயாரிப்பில் S.K செந்தில் ராஜன் எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அது வாங்குனா இது இலவசம்’.
-
பிப்.14 ல் வெளியாகும் கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்ட்
11 Feb 2025கேப்டன் அமெரிக்கா பிரேவ் நியூ வேர்ல்ட் என்ற ஹாலிவுட் திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளது.
-
விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம்
11 Feb 2025செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தில் எஸ்.எஸ்.லலித் குமார் மகன் எல்.கே.
-
ஹவுஸ் மேட்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளீடு
11 Feb 2025கதையின் நாயகனாக தர்ஷன் நடிக்கும் படம் ஹவுஸ் மேட்ஸ், இவர் ஏற்கனவே கனா, தும்பா போன்ற படங்களில் நடித்திருக்கிறார், மேலும், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , த
-
ஜி.டி. நாயுடுவாக நடிக்கும் மாதவன்
11 Feb 2025வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் வழங்கும், கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுத்து இயக்கத்தில் ஜி.டி.நாயுடுவாக மாதவன் நடிக்கிறார்.
-
நீர் மின் உற்பத்தியில் தமிழக மின்வாரியம் புதிய மைல்கல்
11 Feb 2025சென்னை : மத்திய மின்சார ஆணையத்தில் நிர்ணயித்த மின்னுற்பத்தியை விட அதிக அளவு உற்பத்தி செய்துள்ளது.
-
அரசு மருத்துவமனை ஊழியர்களுடன் நடிகர் கஞ்சா கருப்பு வாக்குவாதம்
11 Feb 2025சென்னை: போரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்ற நடிகர் கஞ்சா கருப்பு மருத்துவமனையில் உள்ள ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
-
தை பூச திருநாள்: இ.பி.எஸ் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
11 Feb 2025சென்னை : தைப்பூச திருநாளை திருநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
-
தேர்தல் வியூக மன்னா்களால் பயனில்லை: விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து அமைச்சர் சேகர்பாபு கருத்து
11 Feb 2025சென்னை : தேர்தல் வியூக மன்னா்களால் எவ்வளவு தூரம் பயனிருக்கும் என்பது தெரியவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்த கேள்விக்கு
-
பஞ்சாப் முதல்வருடன் கெஜ்ரிவால் சந்திப்பு லூதியானா தொகுதியில் போட்டியிட திட்டம்?
11 Feb 2025புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் காலியாக உள்ள லூதியானா சட்டசபை தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழக அரசு மீது வீண் பழி சுமத்தும் அண்ணாமலையின் பகல் கனவு நிறைவேறாது: அமைச்சர் காந்தி
11 Feb 2025சென்னை : அரசின் மீது, வீண் பழி சுமத்தி, களங்கம் ஏற்படுத்த பகல் கனவு காணும் எண்ணம், எந்நாளும் நிறைவேறாது என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் 17-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் ஆய்வு மையம் தகவல்
11 Feb 2025சென்னை: தமிழகத்தில் 17-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
-
கஜா புயல் இழப்பீடு கிடைக்காதவர்கள் விண்ணப்பித்தால் அரசு பரிசீலிக்கும் ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
11 Feb 2025சென்னை: கஜா புயல் இழப்பீடு கிடைக்கவில்லை என்று மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என்று தமிழக அரசுதெரிவித்துள்ளது.
-
கோர்ட்களில் அரசு சார்பில் வாதாட 39 புதிய வழக்கறிஞர்கள் நியமனம்
11 Feb 2025சென்னை: சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோட்டு மதுரைக்கிளையில் அரசு சார்பில் வாதாட புதிதாக 39 வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
-
திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா: பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்
11 Feb 2025தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்
-
போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்வேன்: இஸ்ரேல் பணய கைதிகள் விவகாரத்தில் ஹமாசுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
11 Feb 2025வாஷிங்டன்: காசாவில் பிடித்து வைக்கப்பட்டு உள்ள பணய கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்றால், போர்நிறுத்த ஒப்பந்தத்தினை ரத்து செய்து விடுவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய
-
இலங்கை கடற்படையைக் கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்
11 Feb 2025காரைக்கால் : இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளர்.
-
லாட்டரி விற்பனையாளர்கள் சேவை வரி கட்ட தேவையில்லை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
11 Feb 2025புதுடெல்லி: லாட்டரி சீட்டு விற்பனையாளர்கள் மத்திய அரசுக்கு சேவை வரி செலுத்த வேண்டியதில்லை என கூறி அதற்கான மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து உள்ளது.
-
மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசுப்பள்ளி ஆசிரியர் கைது
11 Feb 2025திருப்பூர் : அரசுப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
மதுரையில் தை தெப்பத்திருவிழா கோலாகலம்: தெப்பக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த மீனாட்சி - சுந்தரேஸ்வரர்
11 Feb 2025மதுரை : மதுரையில் தை தெப்பத்திருவிழாவை முன்னிட்டு தெப்பக்குளத்தில் வலம் வந்து அருள்பாலித்த மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.
-
பாலஸ்தீனியர்கள் மீண்டும் காசாவில் குடியேற உரிமையில்லை: அதிபர் டிரம்ப்
11 Feb 2025வாஷிங்டன் : பாலஸ்தீனியர்கள் மீண்டும் காசாவில் குடியேற உரிமையில்லை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
11 Feb 2025மதுரை : தைப்பூசத்தை முன்னிட்டு முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள், காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன
-
யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு
11 Feb 2025புதுடில்லி: யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் பிப்ரவரி 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.