எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தெஹ்ரான் : ஈரான் சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 நீதிபதிகள் உயிரிழந்தனர்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உள்ளது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக முகமது மொஹிசா, அலி ரசானி செயல்பட்டு வந்தனர். இரு நீதிபதிகளும் நேற்று சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் உள்ள ஓய்வெடுக்கும் அறையில் இருந்தனர். அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்த நபர் நீதிபதிகளை குறிவைத்து கண்மூடித்தனமாக சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் நீதிபதிகள் மொஹிசா, அலி ரசானி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தனர். மேலும், இந்த தாக்குதலில் நீதிபதிகளின் பாதுகாவலரும் படுகாயமடைந்தார்.
இதனை தொடர்ந்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபரும் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். சுட்டுக்கொல்லப்பட்ட நீதிபதிகள் இருவரும் தீவிர அடிப்படைவாத கொள்கைகளை கொண்டவர்கள் என்பதும், சமூக ஆர்வலர்கள், போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான தண்டனைகளை கொடுப்பவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் 2 நீதிபதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஈரான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


