முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2025      தமிழகம்
H Raja 2023-09-23

மதுரை, மதுரை சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் பா.ஜ.க.  முன்னாள் தேசியச் செயலா் எச். ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை மீதான வழிபாடு தொடா்பாக இருவேறு மதத்தவருக்கிடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், இந்துக்களின் புனித வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றான திருப்பரங்குன்றம் மலையைப் பாதுகாக்க வலியுறுத்தி, இந்து அமைப்புகள் சாா்பில் இந்த மதுரை பழங்காநத்தத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அனுமதி அளித்ததன்பேரில், இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய பா.ஜ.க.  முன்னாள் தேசியச் செயலா் எச். ராஜா, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை மீதான வழிபாடு தொடா்பாக ஏற்படுத்தப்படும் சா்ச்சைகளை திருப்பரங்குன்றம் மலையை அபகரிக்கும் திட்டமாகவே கருத வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில், தமிழக காவல் துறை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எதிரியாகச் செயல்படுகிறது. திமுக அரசு அகற்றப்பட்டால் மட்டுமே தமிழா்கள் சம உரிமையுடன் வாழ முடியும். திருப்பரங்குன்றம் மலையை யாரும் பங்கு போட அனுமதிக்க மாட்டோம் என்றாா் அவா்.

இந்த நிலையில், மதுரை பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜா, இரு பிரிவினர்களிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அவர் மீது சுப்பிரமணியபுரம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து