எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வங்காளதேச பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் சிட்டகாங் கிங்ஸ் அணியை வீழ்த்தி பார்ச்சூன் பாரிஷால் சாம்பியன் கோப்பையை கைப்பற்றிது. இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் லீக் தொடரான ஐ.பி.எல். போன்று வங்காளதேசத்தில் 'வங்காளதேச பிரீமியர் லீக்' நடத்தப்படுகிறது. இதன் 11-வது சீசன் தற்போது முடிவடைந்துள்ளது. இதன் இறுதிப்போட்டியில் பார்ச்சூன் பாரிஷால் - சிட்டகாங் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற பார்ச்சூன் பாரிஷால் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிட்டகாங் கிங்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன கவாஜா நபே மற்றும் பர்வேஸ் ஹொசைன் அதிரடியாக விளையாடி வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் கவாஜா நபே 66 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கிரஹாம் கிளார்க்கும் (44 ரன்கள்) அதிரடியாக விளையாட அணியின் ரன் வேகம் எகிறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சிட்டகாங் 3 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பர்வேஸ் ஹொசைன் 78 ரன்கள் அடித்தார்.
இதனையடுத்து 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பார்ச்சூன் பாரிஷால் அணியும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும் ரன் வேகத்தை குறையாமல் பார்த்துக்கொண்டனர். கேப்டன் தமிம் இக்பால் அரைசதம் அடித்து அணிக்கு வலு சேர்த்தார். அவருடன் தவ்ஹித் ஹாரிடாய் (32 ரன்கள்), கைல் மேயர்ஸ் (46 ரன்கள்) இருவரும் கணிசமான பங்களிப்பை வழங்க பார்ச்சூன் பாரிஷால் 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் அடித்து வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகன் விருது தமிம் இக்பாலுக்கும், தொடர் நாயகன் விருது மெஹிதி ஹசன் மிராசுக்கு வழங்கப்பட்டது.
6-வது இடத்தில் தமிழக அணி
38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் டென்னிஸ் அணிகள் பிரிவில் தமிழகத்துக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. அபினவ் சஞ் சீவ், மனீஷ் சுரேஷ் குமாா், நிக்கி பூனச்சா உள்ளிட்டோா் அடங்கிய அணி 2-0 என்ற கணக்கில் கா்நாடகத்தை வீழ்த்தியது. தியா ரமேஷ், லட்சுமி பிரபா ஆகியோா் அடங்கிய தமிழக மகளிா் அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.
தமிழ்நாடு 13 தங்கம், 17 வெள்ளி, 19 வெண்கலம் ஆக மொத்தம் 49 பதக்கம் பெற்று பதக்கப் பட்டியலில் 6-வது இடத்தில் நீடிக்கிறது. சா்வீசஸ் 39 தங்கம், 14 வெள்ளி, 13 வெண்கலம் என 66 பதக்கங்களுடன் முதல் இடத்துக்கு முன்னேறியது. கா்நாடகம் 30 தங்கம், 12 வெள்ளி, 16 வெண்கலம் என 58 பதக்கங்களுடன் 2-வது இடத்திலும், மராட்டியம் 23 தங்கம், 39 வெள்ளி, 45 வெண்கலம் என 107 பதக்கங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன.
இலங்கை வீரருக்கு மரியாதை
100 போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்த கருணரத்னே தனது கடைசி இன்னிங்ஸில் ஆட்டமிழந்து செல்லும்போது ஆஸி. வீரர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வழியனுப்பினார்கள். இலங்கை - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இலங்கை தனது முதல் இன்னிங்சில் 257 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 414 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்மித் 131 ரன்களும், அலெக்ஸ் கேரி 156 ரன்களும் எடுத்தனர். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 157 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், 100 போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்த கருணரத்னே தனது கடைசி இன்னிங்ஸில் ஆட்டமிழந்து செல்லும்போது ஆஸி. வீரர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வழியனுப்பினார்கள். இந்த விடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. டெஸ்ட்டில் மொத்தமாக 7,222 ரன்களுடன் ஓய்வுபெற்றுள்ளார். 16 சதங்கள், 39 அரைசதங்கள் அடித்துள்ள கருணரத்னே கிட்டதட்ட 40 சராசரியுடன் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தந்தையானார் பேட் கம்மின்ஸ்
பேட் கம்மின்ஸ் - பெக்கி பாஸ்டன் தம்பதிக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் (வயது 31). இவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி 2023 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றது. பேட் கம்மின்ஸ் தனது நீண்ட நாள் காதலியான பெக்கி பாஸ்டனை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆல்பி என்ற மகன் உள்ளார். இந்நிலையில், பெக்கி பாஸ்டன் 2வது முறையாக கர்ப்பம் அடைந்தார். இவருக்கு இந்த மாதம் குழந்தை பிறக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பேட் கம்மின்ஸ் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், பேட் கம்மின்ஸ் - பெக்கி பாஸ்டன் தம்பதிக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பேட் கம்மின்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த குழந்தைக்கு எடித் மரியா போஸ்டன் கம்மின்ஸ் என பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து பேட் கம்மின்ஸ் - பெக்கி பாஸ்டன் தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
31 Oct 2025மெல்போர்ன் : 2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
-
சென்னை-குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்
31 Oct 2025சென்னை, சென்னை - குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை: மதுரை ஐகோர்ட்
31 Oct 2025மதுரை, கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என்று மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
-
பா.ம.க. உட்கட்சி பிரச்சினை: 6 மாதங்களில் சுமுக தீர்வு; அன்புமணி உறுதி
31 Oct 2025சேலம் : பா.ம.க. உட்கட்சி பிரச்சினைக்கு 6 மாதத்தில் சுமுக தீர்வு ஏற்படும் என்று அன்புமணி= கூறினார்.
-
இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து
31 Oct 2025தமிழ்நாட்டின் 35 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள ஏ.ஆர். இளம்பரிதிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் : ராஜ்நாத் சிங் கையெழுத்து
31 Oct 2025டெல்லி : இந்தியா- அமெரிக்கா இடையே 10 ஆண்டுக்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ராஜ்நாத் சிங் கையெழுத்திட்டார்.
-
ரூ. 1.86 லட்சத்திற்கு ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி
31 Oct 2025பெங்களூரு : ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
-
ஈரோடு-செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து
31 Oct 2025சென்னை : ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து செய்யப்பட்டது.
-
ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை
31 Oct 2025சென்னை : திருமண புகார் வழக்கு நடந்துவரக்கூடியநிலையில், ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
-
கோவையில் அமையும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
31 Oct 2025கோவை : கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழக அரசு.
-
ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
31 Oct 2025சென்னை : ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு ஏற்படுவதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
31 Oct 2025சென்னை : வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு: தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
31 Oct 2025சென்னை : சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
-
பிரதமர் மோடி பொய் பிரசாரம்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
31 Oct 2025சென்னை : பீகாரிகள் பிரதமர் மோடி பொய் பிரசாரம் செய்வதாக தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, மோடி, அமித்ஷா ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள் என்றும் அவர
-
வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
31 Oct 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் - செங்கோட்டையன்
31 Oct 2025கமுதி : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
-
முழு காஷ்மீரும் இந்தியாவுடன் ஒருங்கிணைவதை நேரு அனுமதிக்கவில்லை: பிரதமர் மோடி பேச்சு
31 Oct 2025அகமதாபாத் : முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் ஒருங்கிணைக்க விரும்பினார் படேல், ஆனால் நேரு அனுமதிக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்: அமலாக்கத்துறையின் புகாருக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
31 Oct 2025திருச்சி : குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று அமலாக்கத்துறை புகாருக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
-
த.வெ.க. கூட்ட நெரிசல் விவகாரம்: சம்பவத்தை பார்த்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
31 Oct 2025கரூர் : கரூர் வேலுசாமிபுரத்தில் த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
-
பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் : தமிழக காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்
31 Oct 2025சென்னை : பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்யின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் நன்மைக்காக ஒரு மாநில மக்க
-
சுருளி அருவியில் குளிக்க அனுமதி
31 Oct 2025கூடலூர் ,: நீர்வரத்து சீரானதால் 13 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
சபரிமலையில் மகர திருவிளக்கு பூஜை: 2 மாதங்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
31 Oct 2025கேரளா : சபரிமலையில் மகர திருவிளக்கு பூஜையை முன்னிட்டு 2 மாதங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
-
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான 'ஆன்லைன்' முன்பதிவு இன்று தொடங்குகிறது
31 Oct 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டது.
-
கரூர் கூட்ட நெரிசல்: 5 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை
31 Oct 2025கரூர், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக 5 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
-
தமிழகத்தில் பீகார் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை : வி.சி.க. தலைவர் திருமாவளவன்
31 Oct 2025சென்னை : பீகார் மக்களுக்கு தமிழகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்று திருமாவளவன் கூறினார்.


