எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி: யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் பிப்ரவரி 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் ஐப்எஸ் தேர்விற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி இறுதியில் வெளியானது. இதற்கான விண்ணப்பப் பதிவு நேற்றுடன் (11.02.2025) முடிவடையும் நிலையில், விண்ணப்பிக்க கால அவகாசம் பிப்ரவரி 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
யு.பி.எஸ்.சி. குடிமை பணிகள் மற்றும் இந்திய வன சேவை தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://upsconline.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஓ.டி .ஆர். ப்ரொபைல் பதிவு செய்து, பின்னர் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.
முதல்நிலை தேர்விற்கு விண்ணப்பிக்கும்போது ஏற்படும் சந்தேகங்களுக்கு நேரடியாக யு.பி.எஸ்.சி. -யை 011-23385271/011-23381125/011-23098543 ஆகிய தொலைப்பேசி எண்களில் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்புகொள்ளலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
10 Feb 2026- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மர் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- இராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கைலாச வாகனம், அம்பாள் தங்க சிம்ம வாகனம்.
-
இன்றைய ராசிபலன்
10 Feb 2026 -
இன்றைய நாள் எப்படி?
10 Feb 2026


