முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏப். 1 முதல் யுபிஐ சேவை நிறுத்தம்

சனிக்கிழமை, 22 மார்ச் 2025      இந்தியா      வர்த்தகம்
UPI

மும்பை, செயலற்ற நிலையில் இருக்கும் மொபைல் எண்களின் யுபிஐ சேவைகள் நிறுத்தப்படுவதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அறிவித்துள்ளது.

யுபிஐயுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் 90 நாள்கள்வரையில் செயலற்றதாக இருந்தால், அதன் யுபிஐ சேவைகள் செயலிழக்கச் செய்யப்படும் என்ற புதிய விதிமுறையை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்றும் அறிவித்தது.

யுபிஐயுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களில் அழைப்புகள், எஸ்எம்எஸ், இணையச் சேவைகளை, அவ்வப்போது பயன்படுத்துவதன் மூலம் இதனைத் தடுக்கலாம். நீண்ட காலம் செயல்பாட்டில் இல்லாத மொபைல் எண்களை, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயலிழக்கச் செய்துவிடும். செயலிழக்கப்பட்ட எண்களை புதிய பயனர்களுக்கு வழங்குவதையும் பெரும்பாலும் வழக்கமாக சில நிறுவனங்கள் கொண்டுள்ளன.

இவ்வாறான செயல்பாட்டின்போது, ஒரே எண்ணை புதிய பயனர் வாங்கும்போது, அந்த எண்ணின் முந்தைய பயனரின் யுபிஐ செயல்பாடுகளும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி, முந்தைய பயனரின் யுபிஐ இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளை தவறான நபர்கள் பயன்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து