எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்த ஐபிஎல் சீசனில் ருதுராஜ் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேற எம்.எஸ்.தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதுவரை 399 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 7,566 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 28 அரைசதங்களுடன் 527 பவுண்டரிகள், 346 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
சென்னையில் சேப்பாக்கம் திடலில் நேற்று (ஏப்.25) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியில் தனது 400-ஆவது டி20 போட்டியில் விளையாடினார். இதற்கு முன்பாக இந்தியாவின் சார்பில் ரோஹித் சர்மா (456), விராட் கோலி (407), தினேஷ் கார்த்திக் (412) 400க்கும் அதிகமான டி20 போட்டிகளில் விளையாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
____________________________________________________________________________________________
சிந்துவின் நெகிழ்ச்சி பதிவு
இந்தியன் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு ராஜஸ்தான் ராயல்ஸை அணிகள் பெங்களூரில் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி. 20 ஓவா்களில் 205/5 ரன்கள் சோ்க்க, அடுத்து விளையாடிய ராஜஸ்தான் 20 ஓவா்களில் 194/9 ரன்களே எடுத்தது தோல்வியுற்றது.
இந்தப் போட்டியை நேரில் கண்டுகளித்த பி.வி.சிந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியதாவது: மூளை சொல்கிறது ஆரஞ்சு ஆர்மி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்). ஆனால், எனது இதயம் புதிய நகரம், புதிய அணிக்கு எனக் கூறுகிறது. ஈ சாலா கப் நம்தே. பின் குறிப்பு: ஆர்.சி.பி. நீங்கள் உங்களது அதிர்ஷ்ட தேவதையை கண்டுபிடித்துவிட்டீர்கள் எனக் கூறியுள்ளார். பி.வி.சிந்து ஹைதராபாதைச் சேர்ந்தவர். இருப்பினும் ஆர்.சி.பி. அணிக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளது ஆர்.சி.பி. ரசிகர்களிடையே ஆதரவு பெற்றுள்ளது. மேலும். தன்னைத் தானே அதிர்ஷ்ட தேவதை எனவும் கூறியுள்ளார்.
____________________________________________________________________________________________
பி.எஸ்.எல். ஒளிபரப்புக்கு தடை
ஜம்மு - காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தது இந்தியா முழுவதும் அதிர்வலைகள ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் அனைத்துப் போட்டிகளையும் நேரடி ஒளிபரப்பு தளமான பேன்கோட் செயலில் அதன் வலைத்தளத்திலிருந்து நீக்கியுள்ளது. இதுகுறித்து பேன்கோட் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பஹல்காமில் நடந்த வேதனையளிக்கும் சம்பவம் மற்றும் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒளிபரப்பை நிறுத்த முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். பேன்கோடை சோனி நிறுவனமும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை ஒளிபரப்பி வருகிறது. இருந்தாலும், இதைப் பற்றி எந்தத் தகவலையும் சோனி நிறுவனம் வெளியிடவில்லை.
____________________________________________________________________________________________
பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கூறியதாவது: தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்த அனைத்துக் குடும்பங்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது இந்தியர்களான நம் அனைவரையும் பாதித்துள்ளது.
குற்றவாளிகள் அனைவருக்கும், அவர்களை ஆதரித்த அனைவருக்கும் (பயங்கரவாதிகள்), அவர்களைக் கையாண்ட அனைவருக்கும் நான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். இந்த சண்டை எல்லாம் என்ன சாதித்தது? கடந்த 78 ஆண்டுகளாக, ஒரு மில்லிமீட்டர் நிலம் கூட கைமாறவில்லை இல்லையா? எனவே நாம் ஏன் அமைதியாக வாழ்ந்து, நம் நாட்டை வலிமையாக்கக் கூடாது? அதுதான் எனது வேண்டுகோள் என தெரிவித்தார்.
____________________________________________________________________________________________
ஹேசில்வுட்டுக்கு பிளவர் புகழாரம்
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 11 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்.சி.பி. த்ரில் வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட்டுதான். சிறப்பாக பந்து வீசிய ஹேசில்வுட் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த நிலையில் ஆர்.சி.பி. அணியின் தலைமை பயிற்சியாளரான ஆண்டி பிளவர், ஹேசில்வுட்டை புகழந்துள்ளார்.
இது தொடர்பாக ஆண்டி பிளவர் கூறுகையில் "ஹேசில்வுட் சிறப்பாக செயல்படுத்தக்கூடியவர். அவர் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர். எந்தவொரு வடிவிலான போட்டியிலும் நெருக்கடியான நிலையில் சிறந்தவர். அவர் சிறந்த லெந்த் பவுலிங்கிற்கு பெயர் பெற்றவர் என்பது எனக்குத் தெரியும், ஆனால் அவருக்கு சிறந்த ஆல்-ரவுண்ட் திறமைகள் உள்ளன. இந்த சீசனில் புவி சிறப்பாக பந்து வீசி வருகிறார். ராஜஸ்தானுக்கு எதிராக யாஷ் தயால் அட்டகாசமாக பந்து வீசினார். குறிப்பாக கடைசி ஓவரில் அசத்தினார். இவ்வாறு ஆண்டி பிளவர் தெரிவித்தார்.
____________________________________________________________________________________________
நிச்சயம் வெல்வோம்: பிளெமிங்
ஐ.பி.எல். தொடரின் 43-வது லீக் ஆட்டம் சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அடுத்து வரும் 6 போட்டிகளையும் வென்று பிளே ஆப் சுற்றுக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இப்படியொரு நிலையிலிருந்து எப்படி வெல்வது என்பதற்கான புளூ பிரிண்டை ஆர்.சி.பி. அணி கடந்த ஆண்டு அமைத்துக் கொடுத்துள்ளது. ஒருவேளை நாங்கள் தகுதிபெறாவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறோம். கடந்த காலங்களிலும் இதே மாதிரியான நிலையில் இருந்திருக்கிறோம். பிரச்சனைகளை சரிசெய்து அடுத்த ஆண்டே சாம்பியனும் ஆகியிருக்கிறோம். அடுத்து வரும் அத்தனைப் போட்டிகளையும் எங்களை சரிசெய்து கொள்வதற்கான வாய்ப்பாகத்தான் பார்க்கிறோம். எந்த வாய்ப்பையும் தவறவிடமாட்டோம் என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வார ராசிபலன்
14 Feb 2026


