முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று சித்திரை முழுநிலவு மாநாடு: புதுச்சேரியில் மதுக்கடைகள் அடைப்பு

சனிக்கிழமை, 10 மே 2025      இந்தியா
Mathu 2023 04 15

Source: provided

புதுச்சேரி : சித்திரை முழுநிலவு வன்னியர் சங்க மாநாடு இன்று மாமல்லபுரம் அருகே நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி வழியாக வருவோர் கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி திண்டிவனம் வழியாக செங்கல்பட்டு சென்று அங்கிருந்து மாமல்லபுரம் செல்ல வேண்டும் என தமிழக காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மாநாட்டுக்கு வரும் தொண்டர்களால் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க புதுச்சேரி கலால்துறை மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து புதுச்சேரி கலால்துறை இணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்டுள்ள உத்தரவில், “புதுச்சேரியில் உள்ள சாராயம், கள், பார் உட்பட அனைத்து மது விற்பனைக் கூடங்களையும் இன்று மதியம் 1 மணி முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சித்திரை முழுநிலவு இளைஞர் மாநாடு மாமல்லபுரத்தில் நடைபெற இருப்பதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்ககும் வகையில் இந்த தடுப்பு நவடிக்கை எடுக்கப்படுகிறது.” என்று அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து