முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தடை

ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2025      தமிழகம்
Shathuragiri

Source: provided

கோவை : கோவையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் வெள்ளியங்கிரி மலையில் ஏற பக்தர்களுக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி மாவட்டங்களில்  சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அந்த வகையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்குதொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டுகிறது.

இந்நிலையில், கோவையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் வெள்ளியங்கிரி மலையில் ஏற பக்தர்களுக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை என வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், பரளிக்காடு, பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலா தலங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து