Idhayam Matrimony

தே.ஜ. கூட்டணி முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை : 2 தீர்மானங்கள் நிறைவேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2025      இந்தியா
Modi NDA-Meeting-2024-06-07

Source: provided

புதுடெல்லி : தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

10-வது நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். மேற்கு வங்காளம், கேரளா, பீகார் உள்பட 5 மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளவில்லை.

இதை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.  இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த 20 மாநில முதல்வர்கள் மற்றும் 18 துணை முதல்வர்கள் கலந்து கொண்டனர். பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

முதல்வர்களான யோகி ஆதித்யநாத் (உத்தர பிரதேசம்), நிதிஷ் குமார் (பீகார்), தேவேந்திர பட்னாவிஸ் (மகாராஷ்டிரா), மற்றும் துணை முதல்வர்களான ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார், பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம்  நடத்திய ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்காக இந்திய பாதுகாப்பு படைகள் மற்றும் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு எடுத்த முடிவுக்கும் பாராட்டு தெரிவித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து