Idhayam Matrimony

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2025      தமிழகம்
CM-1-2025-05-25

Source: provided

சென்னை : தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாகிப் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணி அளவில் வயது முப்பு காரணமாக, தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முஹம்மது அயூப் (84) மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல அரசியல் கட்சித் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்று சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், நேற்று தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாகிபின் இல்லத்திற்கு நேரில் சென்று மறைந்த சாகிபின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அவருடன், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் துறைமுகம் காஜா, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ் ஆகியோர் துக்க நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து