Idhayam Matrimony

தமிழக தலைமை காஜி மறைவுக்கு த.வெ.க. தலைவர் விஜய் இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2025      தமிழகம்
Vijay 2023-12-30

Source: provided

சென்னை : தலைமை காஜி மறைவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் தலைமை காஜி சலாகுத்தீன் முஹம்மது அயூப் (84) நேற்று முன்தினம் காலமானார்.  அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ் மாநில தேசிய லீக் கட்சி சம்ஜூதீன் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தலைமை காஜி மறைவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு அரசு தலைமை காஜி அல்லாமா முப்தி முஹம்மது ஸலாஹுத்தீன் அய்யூபி காதிரி அஜ்ஹரி அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். தனது தலைமை காஜி பொறுப்பில் நேர்மையோடு அறத்தின் வழியில் பணியாற்றியவர். அரசு வழங்கிய சைரன் வைத்த கார், அரசு ஒதுக்கிய வீடு, அரசு வழங்கிய தலைமை அலுவலகம் எனத் தனது பொறுப்புக்காக அரசு வழங்கிய சலுகைகளைப் பெறாமல் சேவையாற்றியவர்.

அனைவரின் நன்மதிப்பைப் பெற்ற தலைமை காஜி அல்லாமா முப்தி  முஹம்மது ஸலாஹுத்தீன் அய்யூபி காதிரி அஜ்ஹரி அவர்களைப் பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து