முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெடி விபத்து மற்றும் நீரில் மூழ்கி பலியான பெண் மற்றும் பள்ளி மாணவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூன் 2025      தமிழகம்
CM Stalin 2024-12-10

Source: provided

சென்னை : கடலூர் மாவட்டம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலிான பெண் மற்றும் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் ஏரியில் மூழ்கி பலியான பள்ளி மாணவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், பெரியகுமட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (15.06.2025) காலை சுமார் 11.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் புவனகிரி வட்டம், சின்னக்குமட்டி கிராமம், நடுத்தெருவைச் சேர்ந்த லதாகுமாரி (வயது 37) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் ஏரியில் மூழ்கி பலியான பள்ளி மாணவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர், பார்வதிபுரம் கிராமம், சவேரியார் நகரைச் சேர்ந்த வின்சென்ட் அமல்ராஜ் அந்தோணி என்பவரின் மகன் அப்டேல் டெவின் ரோஜர் (வயது 17) என்பவர் நேற்று முன்தினம் (14.6.2025) மாலை சுமார் 5.00 மணியளவில் பார்வதிபுரம் கிராமத்திலுள்ள வெங்கலத்து ஏரியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து