Idhayam Matrimony

சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்

திங்கட்கிழமை, 28 ஜூலை 2025      தமிழகம்      அரசியல்
EPS 2020 11-16

சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்றும், நாளையும்  சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார். 

தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கினார். சட்டசபை தொகுதி வாரியாக "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் அவர் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அதன்படி இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும்  (புதன்கிழமை) சிவகங்கை மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார். சட்டமன்ற தொகுதிக்கு ஒரு இடம் என்ற வகையில் அவர் பிரசாரம் செய்கிறார். அதன்படி காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய 4 இடங்களில் அவர் பேசுகிறார்.

அவரது சுற்றுப்பயண விவரம் வருமாறு:-

இன்று மாலை 4.30 மணி அளவில் காரைக்குடி எம்.ஜி.ஆர். சிலை அருகில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். பின்னர் மாலை 5.30 மணி அளவில் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகேயும், இரவு 7:45 மணி அளவில் சிவகங்கை அரண்மனை வாசலிலும் மக்களை சந்தித்து பேசுகிறார். அன்று இரவு எடப்பாடி பழனிசாமி சிவகங்கையில் தங்குகிறார்.

பின்னர் நாளை  (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் சிவகங்கை சன் ராக்ஸ் மகாலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் மஞ்சுவிரட்டு பந்தயம், வடமாடு நலச்சங்கம், விவசாய சங்கம், விளையாட்டு வீரர்கள், தென்னை நார் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார்.

மாலை 4.30 மணி அளவில் மானாமதுரை தேவர் சிலை அருகே அவர் மக்களை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அவர் செல்கிறார். சிவகங்கை மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், காளியாட்டம் போன்ற கலை நிகழ்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து