Idhayam Matrimony

கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : எடப்பாடி பழனிசாமி பேட்டி

புதன்கிழமை, 30 ஜூலை 2025      தமிழகம்
EPS-1 2025-07-30

Source: provided

சிவகங்கை : கீழடி தொடர்பாக மாநில அரசு கேட்பவைக்கு நாங்கள் துணை நிற்போம் என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 2026 காண சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில், அதிமுக வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. மேலும் கட்சியை வலுப்படுத்தும் கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும், திமுக அரசு செயல்படுத்தாத வாக்குறுதிகள் மற்றும் குறைகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில்'' தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம்.. ''என்ற பெயரில் மாவட்டம் வாரியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்திற்கு தற்பொழுது எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

இந்தநிலையில், கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- இப்போது கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர். தமிழனின் பெருமையை பறைசாற்றுவதே எங்கள் நோக்கம். கீழடி தொடர்பாக மத்திய அரசு கேட்கும் விளக்கத்தை மாநில அரசு கொடுக்க வேண்டும். என்ன விளக்கம் என்பதில் வெளிப்படையாக எதுவும் சொல்லப்படவில்லை என்பதால், இரு பக்கமும் என்ன முரண் நிலவுகிறது என தெரியவில்லை. இருப்பினும் கீழடி தொடர்பாக மாநில அரசு கேட்பவைக்கு நாங்கள் துணை நிற்போம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து