முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூன் 2025      உலகம்
Crude-oil-2025-05-21

Source: provided

டெல்அவீவ் : இஸ்ரேல், ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தீவிர தாக்குதல் நடத்தி வருவதால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் ஒரே நாளில் 2 முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, அந்நாட்டின் தலைநகர் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் உட்பட பல நகரங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் ராணுவ தலைமையகம் உட்பட பல கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கும் இடையே போர் வலுத்துள்ளது. ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்துள்ள நிலையில், இஸ்ரேல் மீது ஈரானும், ஹவுதி கிளர்ச்சிப் படையும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இவ்வாறாக இஸ்ரேல், ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தீவிர தாக்குதல் நடத்தி வருவதால், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் பேரலுக்கு 6 டாலர் உயர்ந்து 78 டாலரானது. இதன்மூலம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருந்த நிலைக்கு சென்றது. எனினும், இறுதியில் 74 டாலராக நிறைவடைந்தது. இந்த போர் தீவிரமானால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் என தெரிகிறது.

இது குறித்து எஸ் அன்ட் பி குளோபல் தலைவர் ரிச்சர்டு ஜோஸ்விக் கூறும்போது, “இஸ்ரேல் - ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு உள்ளது. ஆனால், ஏற்றுமதி பாதிக்கப்படுமா என்பதுதான் முக்கியம். கடந்த முறை ஈரானும் இஸ்ரேலும் மாறி மாறி தாக்குதல் நடத்தியபோது, கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. பின்னர், போர் தீவிரமடையவில்லை என்றும், எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிந்தவுடன் அவற்றின் விலை சரிந்தது.” என்றார்.

உலக அளவிலான கச்சா எண்ணெய் சரக்கு போக்குவரத்தில் 20% ஈரானுக்கு வடக்கே உள்ள ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறுகிறது. இதனால், ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து