முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடிவேல் ராவணனை நீக்கம்: பா.ம.க. பொதுச்செயலாளரை நியமித்து ராமதாஸ் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூன் 2025      தமிழகம்
Ramdoos 2025-06-15

Source: provided

சென்னை : பா.ம.க. பொதுச்செயலாளராக முரளி சங்கரை நியமித்து ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கு இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல் நடந்து வருகிறது. இதுஒருபுறம் இருக்க டாக்டர் ராமதாஸ் கட்சியில் சரியாக செயல்படாதவர்களையும், டாக்டர் அன்புமணி ராமதாசின் ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கி புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து வருகிறார். இதுவரை 60 மாவட்ட செயலாளர்கள், 39 மாவட்ட தலைவர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பா.ம.க. பொதுச்செயலாளராக முரளி சங்கரை நியமனம் செய்து டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பா.ம.க. பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வடிவேல் ராவணனை நீக்கி, முரளி சங்கர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட பா.ம.க. வடக்கு மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுடன் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து