எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி, நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை மீது நம்பிக்கை ஏற்படவில்லை என்றும் அவர் நீதிபதி பதவியில் நீடிப்பது குறித்து பாராளுமன்றம் முடிவு செய்யட்டும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் இருந்து கடந்த மார்ச் மாதம் கட்டுக்கட்டாக எரிந்த நிலையில் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் தனது பதவி நீக்கம் மற்றும் உள் விசாரணைக்குழுவுக்கு எதிராக யஷ்வந்த் வர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த திங்கள்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், 'விசாரணைக் குழுவின் விசாரணை நிறைவடைந்து, அதன் அறிக்கை வெளியிடப்படும் வரை இந்த மனுவை தாக்கல் செய்யாமல் காத்திருந்தது ஏன்?' என நீதிபதி யஷ்வந்த் வா்மாவிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்றம், மனுவை முறையாகத் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது. தொடர்ந்து நேற்று நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, ஏ.ஜி.மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி தத்தா, "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒன்றும் தபால் நிலையம் அல்ல. நீதித்துறையின் தலைவர் என்ற முறையில் அவருக்கு நாட்டிற்கான கடமைகள் இருக்கின்றன. தவறான நடத்தை தொடர்பான விவகாரங்கள் வரும்போது அவற்றை குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு அனுப்ப வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது" என்று கூறினார்.
நீங்கள் ஏற்கெனவே முடிவு எடுத்துவிட்டதாக யஷ்வந்த் வர்மா தரப்பு வழக்க்கறிஞர் கபில் சிபல் கூற, அதற்கு நீதிபதி தத்தா, "நாங்கள் ஏற்கெனவே முடிவை எடுத்திருந்தால் நாங்கள் அமைதியாக இருந்து உங்களை வாதிட அனுமதித்திருப்போம். தீர்ப்பினையும் வழங்கியிருப்போம். ஆனால் அது நியாயமான நீதி அல்ல. அதனால்தான் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். சட்டத்தை நாங்கள் பின்பற்ற வேண்டும்" என்று கூறினார்.
மேலும் "நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை மீது நம்பிக்கை ஏற்படவில்லை. உங்கள் நடத்தை பலவற்றை சொல்கிறது. நீங்கள் ஒன்றைக் கண்டுபிடிக்க காத்திருந்து அது கிடைத்தவுடன் இங்கு வந்திருக்கிறீர்கள். நீதிபதி பதவியில் நீடிக்க வேண்டுமா என்பதை பாராளுமன்றம் முடிவு செய்யட்டும்" என்று கூறி வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


