முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் நக்சல் உள்பட 3 பேர் ஆந்திராவில் சுட்டுக்கொலை

புதன்கிழமை, 18 ஜூன் 2025      இந்தியா
Nakselit

Source: provided

அமராவதி : ஆந்திராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கச்சூட்டில் நக்சல் அமைப்பின் தலைவன் சலபதியின் மனைவி அருணா உட்பட நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆந்திரா மாநிலம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக உளவுதுறைக்கு தகவல் வந்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதையடுத்து, பதிலுக்கு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சல் அமைப்பின் தலைவன் சலபதியின் மனைவி அருணா உட்பட நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து வெடிமருந்துகள் மற்றும் மூன்று AK-47 துப்பாக்கிகளை பாதுகாப்பு படையினர் மீட்டனர். அப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருக்கிறார்களா என்பது குறித்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

நக்சல் அமைப்பு தலைவன் சலபதி, கடந்த ஜனவரியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டான்.  இவனது மனைவி அருணாவும் நக்சல் அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருந்தார்.  அவர், நேற்று பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார். இது நக்சல் அமைப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து