முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டாலின் தனி மனிதன் அல்ல: அமித்ஷாவுக்கு ஆ.ராசா பதிலடி

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025      தமிழகம்
raja

சென்னை, ஸ்டாலின் தனி மனிதன் அல்ல. இவருக்கு பின்னால் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற தத்துவம் இருக்கிறது என்று ஆ.ராசா தெரிவித்தார்.

தமிழகத்தை பிடிக்கப்போவதாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு முட்டாள் என தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ. ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆ. ராசா பேசியதாவது:- சாதனைகளுக்காக மட்டுமே ஒரு அரசு 50 ஆண்டு காலம் இருக்கும் எனச் சொல்ல முடியாது. இந்திரா காந்தி மறைந்தபோது ஆட்சி மாறியது. எம்.ஜி.ஆர். மருத்துவமனைக்கு சென்ற போது மாறியது. 2ஜி 1.76 லட்சம் கோடி ஊழல் எனச் சொன்னார்கள். அப்போது ஆட்சி மாறியது. ஜனநாயகத்தில் நாம் செய்த சாதனைகள் மற்றும் தலைவர்கள் ஆளுமையோடு நிற்காது. எதிரிகள் வெவ்வேறு வடிவில் வருவார்கள்.

சமீபத்தில் அமித் ஷா, மதுரைக்கு வந்திருந்தார். அப்போது டெல்லியை பிடித்துவிட்டோம். ஹரியானாவை பிடித்து விட்டோம். மகாராஷ்டிராவை பிடித்துவிட்டோம். அடுத்து தமிழ்நாடு எனக் கூறியுள்ளார்.  டெல்லியில் பார்த்த கெஜ்ரிவால் தனிப்பட்ட தலைவன். ஹியானாவில் தோற்கடித்தது ஒரு தனி மனிதனை. மகாராஷ்டிராவில் தோற்கடித்தது தனி மனிதனை. ஸ்டாலின் தனி மனிதன் அல்ல. இவருக்கு பின்னால் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற தத்துவம் இருக்கிறது.

இவ்வாறு ஆ.ராசா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து